LOADING...
நீங்க இல்லாமலேயே வீடியோ உருவாகும்! யூடியூப் ஷார்ட்ஸில் ஏஐ மாயாஜாலம்! ஓபன் ஏஐ நிறுவனத்திற்குப் போட்டியாக புதிய வசதி!
யூடியூப் ஷார்ட்ஸில் ஏஐ புரட்சி

நீங்க இல்லாமலேயே வீடியோ உருவாகும்! யூடியூப் ஷார்ட்ஸில் ஏஐ மாயாஜாலம்! ஓபன் ஏஐ நிறுவனத்திற்குப் போட்டியாக புதிய வசதி!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 22, 2026
04:15 pm

செய்தி முன்னோட்டம்

யூடியூப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) நீல் மோகன், 2026 ஆம் ஆண்டிற்கான யூடியூப்பின் புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளார். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், கிரியேட்டர்கள் இனி தங்கள் சொந்த உருவத்தை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் ஷார்ட்ஸ் வீடியோக்களை உருவாக்க முடியும். அதாவது, நீங்கள் கேமரா முன்னால் நிற்காமலேயே, உங்கள் தோற்றத்தைக் கொண்ட ஒரு ஏஐ உருவம் உங்களுக்காக வீடியோவில் தோன்றும். சமீபத்தில் ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்திய சோரா ஆப்பிற்குப் போட்டியாக இந்த வசதி பார்க்கப்படுகிறது. சோராவில் டெக்ஸ்ட் கொடுத்தால் வீடியோ உருவாகும் வசதி இருப்பது போல, யூடியூப் தனது பயனர்களுக்குத் தங்களின் உருவத்திலேயே வீடியோக்களை உருவாக்க அனுமதி அளிக்கிறது.

வசதிகள்

2026 இல் வரவுள்ள பிற முக்கிய ஏஐ வசதிகள்

வியோ 3 போன்ற மேம்பட்ட ஏஐ மாடல்களை யூடியூப் ஷார்ட்ஸில் இணைப்பதன் மூலம் உயர்தர வீடியோக்களை உருவாக்க முடியும் என்றும் நீல் மோகன் தெரிவித்துள்ளார். பயனர்கள் ஏஐ உதவியுடன் சொந்தமாக இசையமைக்கும் வசதியும் சோதிக்கப்பட்டு வருகிறது. வெறும் டெக்ஸ்ட் கட்டளைகளைக் கொடுத்து எளிய கேம்களை உருவாக்கும் வசதியும் வரவுள்ளது. நீங்கள் பேசும் வீடியோவை வேறு மொழிகளில் தானாகவே மொழிமாற்றம் செய்யும் வசதி மேலும் மேம்படுத்தப்படும். ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் எவை என்பதைப் பார்வையாளர்கள் கண்டறியும் வகையில் பிரத்யேக லேபிள்கள் ஒட்டப்படும்.

நன்மைகள்

கிரியேட்டர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்

இந்தத் தொழில்நுட்பம் கிரியேட்டர்களின் வேலையை மிகவும் எளிதாக்கும். ஏஐ என்பது கிரியேட்டர்களுக்கு ஒரு கருவியாக இருக்குமே தவிர, மனித கற்பனைத் திறனுக்கு மாற்றாக இருக்காது என்று நீல் மோகன் உறுதியளித்துள்ளார். 2025 டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் சேனல்கள் யூடியூப்பின் ஏஐ கருவிகளைப் பயன்படுத்தியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த புதிய வசதிகள் மூலம் சாதாரண பயனர்கள் கூட ஒரு பெரிய ஸ்டுடியோ வசதி இல்லாமல் தரமான வீடியோக்களை உருவாக்க முடியும்.

Advertisement