யூடியூப்பின் 'லைக்' பட்டனை பயனர்கள் அழுத்தும் போது மர்மமான முறையில் மறைந்துவிடுகிறதாம்
ஒரு விசித்திரமான நிகழ்வாக, யூடியூப் பயனர்கள் பலரும் அந்த தளத்தில் 'லைக்' பட்டன் கிளிக் செய்யும் போது மறைந்துவிடுகிறது என்று தெரிவித்துள்ளனர். இந்தச் சிக்கலை முதலில் 9to5Google தான் வெளியிட்டது. லைக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, தம்ப்ஸ்-அப் ஐகான் மறைந்து, அங்கே காலியான சாம்பல் நிற லோகோ தோன்றுவதாக அந்த செய்தி குறிப்பிட்டது. பல்வேறு இணைய உலாவிகள் மற்றும் வெவ்வேறு யூடியூப் வீடியோக்களில் உள்ள பயனர்களிடமிருந்து அறிக்கைகள் வரவே, இந்த பிரச்சனை பற்றி வெளியில் தெரியத்தொடங்கியது.
யூடியூப்பின் டெஸ்க்டாப் தளத்திற்கு மட்டுமே இந்த பிரச்னை
சுவாரஸ்யமாக, இந்த ஒழுங்கின்மை YouTubeஇன் டெஸ்க்டாப் தளத்தில் மட்டுமே தோன்றியுள்ளது. யூடியூப்பை அதன் ஆண்ட்ராய்ட் ஆப்ஸ் அல்லது மொபைல் பிரவுசர் மூலம் அணுகும் பயனர்கள் 'லைக்' பட்டன் சிக்கலை எதிர்கொள்ளவில்லை என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. Reddit பயனர்கள் சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டுள்ள நிலையில், இதுபோன்று சிக்கலை யூடியுப் சந்திப்பது இது முதல் முறை அல்ல.
யூடியூப் பிரச்சினையை விசாரித்து வருகிறது
இந்த சூழலில் அன்லைக் பட்டன் மட்டும் தொடர்ந்து செயல்படுகிறது என்பதை பயனர்கள் கவனிக்க வேண்டும். இதற்கிடையில், யூடியூப் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது பிரச்சினையை கவனித்து வருவதாகக் கூறி உள்ளது. யூடியூப் நிறுவனம், "உறுதியாக இருங்கள், ஐகான் காண்பிக்கப்படுகிறதோ இல்லையோ, வீடியோ இன்னும் லைக்குகளை பெறுகிறது!" விரைவில் பிரச்னை தீரும் என நம்புகிறோம்.