யூடியூப் கிரியேட்: AI கொண்டு இயக்கப்படும் யூடியூப்பின் எடிட்டிங் செயலி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை
வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப், 'வீடியோக்களை உருவாக்க அல்லது பகிர அனைவரையும் அனுமதிக்கும்' முயற்சியில் 'யூடியூப் கிரியேட்' என்ற புதிய வீடியோ எடிட்டிங் செயலியை அறிவித்துள்ளது. வியாழன் அன்று 'மேட் ஆன் யூடியூப்' நிகழ்வில் அறிவிக்கப்பட்டது இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், யுகே, இந்தோனேஷியா, கொரியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ஆண்ட்ராய்டில் தற்போது இந்த செயலியின் பீட்டா வெர்ஷன் செயல்பாட்டில் உள்ளது. அதே நேரத்தில் iOS தளத்திற்கு வரும் 2024 இல் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
யூடியூப் கிரியேட்
யூடியூப் கிரியேட் என்பது குறும்படங்கள் மற்றும் நீண்ட வீடியோக்கள் இரண்டிற்குமான வீடியோ தயாரிப்பை "எளிமையாகவும், எளிதாகவும்" உருவாக்க வடிவமைக்கப்பட்ட இலவச பயன்பாடாகும் என்று நிறுவனம் கூறியது. AI- துணை கொண்டு இயங்கும் இந்த செயலி, துல்லியமான எடிட்டிங் டிரிம்மிங், தானியங்கி தலைப்பு, குரல்வழி மற்றும் மாற்றங்கள் போன்ற அம்சங்கள் இருக்கும். டிக்டாக்கைப் போன்ற பீட்-மேச்சிங் தொழில்நுட்பத்துடன் கூடிய, ராயல்டி-இல்லாத இசை வரம்பைத் தேர்வுசெய்யவும் இந்த செயலி பயனர்களை அனுமதிக்கும். இந்த புதிய செயலியை வடிவமைக்க, சுமார் 3,000 படைப்பாளர்களின் கருத்துக்களைப் பயன்படுத்தியதாக YouTube கூறுகிறது. வருங்காலத்தில் இதில் மேலும் புதிய அம்சங்களையும் செயல்பாட்டையும் சேர்க்கபோவதாக கூறியது யூட்யூப்