யூடியூப் மற்றும் யூடியூப் மியூசிக் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளில் புதிய மாற்றங்கள்
யூடியூப் மற்றும் யூடியூப் மியூசிக் தளங்களின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருகிறது ஆல்ஃபபெட்டை தாய் நிறுவனமாகக் கொண்ட யூடியூப் நிறுவனம். ஆண்ட்ராய்டு யூடியூப் செயலியை மறுவடிவமைப்பு செய்து வருகிறது அந்நிறுவனம். தற்போதைய யூடியூப் ஆண்ட்ராய்டு செயிலியின் கீழே உள்ள பட்டையின் இறுதியில் 'லைப்ரரி' தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும். புதிய மறுவடிவமைப்பு செய்யப்பட்ட செயலியில் அந்தத் தேர்வு நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக 'யூ' (You) என்ற தேர்வு கொடுக்கப்படவிருக்கிறது. லைப்ரரி தேர்வில் நமக்குக் கொடுக்கப்பட்ட வசதிகள் மற்றும் நம்முடைய யூடியூப் கணக்குகள் மெனு ஆகியவற்றை ஒன்றினைத்து இந்த யூ தேர்வின் கீழ் கொடுக்கவிருக்கிறது அந்நிறுவனம். தற்போது பரிசோதனையில் இருக்கும் இந்த மாற்றமானது விரைவில் பொதுப் பயனாளர்களுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யூடியூப் மியூசிக் செயலியில் என்ன மாற்றம்?
யூடியூபைப் போலவே யூடியூப் மியூசில் செயலியிலும் புதிய மாற்றம் ஒன்றைக் அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். அதன் படி, தற்போது 'Now Playing' எனப் தற்போது இசைத்து வரும் பாடல்கள் குறித்த தகவல்களை வழங்கும் இடத்தில், புதிய கருத்துக்களைப் பதிவிடும் பகுதியாக மாற்றப்பட்டிருக்கிறது. யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்டிருக்கும் குறிப்பிட்ட பாடலின் அதிகாரப்பூர்வ காணொளியின் கீழ் பதிவிடப்பட்டிருக்கும் கருத்துக்களும் இந்தப் பகுதியில் காட்டப்படும் வகையில் புதிய மாற்றம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, பயனாளர்கள் ஒரு பாடலின் முனமுனுப்பைக் கொண்டே அதனைக் கண்டறியும் வகையில் புதிய வசதியையும் சோதனை செய்து வருகிறது அந்நிறுவனம்.