Page Loader
5 ஆண்டுகள் கழித்து முதலிடம் பிடித்த சாம்சங் - Xiaomi வீழ்ச்சி
சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம்

5 ஆண்டுகள் கழித்து முதலிடம் பிடித்த சாம்சங் - Xiaomi வீழ்ச்சி

எழுதியவர் Siranjeevi
Jan 20, 2023
01:55 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு Xiaomi கீழே இறங்கி சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. அதே போல், விவோ இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. Q4 2022 க்கு Canalys வழங்கி புதிய தரவு கடந்த 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு சாம்சங் நிறுவனம் இச்சாதனையை முதன் முறையாக நிர்வகித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு Xiaomi Q4 2022 இல் அதன் தலைமை நிலையை இழந்து மற்றும் 5.5 மில்லியன் யூனிட்களின் ஏற்றுமதியுடன் மூன்றாவது இடத்திற்குச் சென்றது என அறிக்கை வெளியாகியுள்ளது. சவாலான சந்தை நிலவரங்களை சாதகமாக்கி விவோ நிறுவனம் இரண்டாம் இடம் பிடித்து, Xiaomi மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

SAMSUNG VS XIAOMI

SAMSUNG VS XIAOMI - எப்படி உயர்ந்தது?

சாம்சங் நிறுவனம் தனது தயாரிப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. மலிவு விலையில் சாதனங்களை வெளியிட்டது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 21% பங்குகளை வைத்துள்ளது. 6.17 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்தது. அதேப்போல், Xiaomi 2022 இல் பண்டிகைக் கால விற்பனையின் போது அதன் பழைய போன்கள் விற்பனை ஆகாமல் கிடப்பில் உள்ளது. மேலும், அதன் புதிய வெளியீடுகளை கட்டுப்படுத்த நிறுவனத்தை கட்டாயப்படுத்தியது. இதனிடையே, விவோ நிறுவனம் மூன்று அல்லது நான்கு நகரங்களில் உள்ள ஆஃப்லைன் சந்தையில் கவனம் செலுத்தியது. அதன்படி ஆஃப்லைனில் விவோ போனை தொட்டு பார்த்து திருப்தியடைந்து வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகமாகினர். ஆனால், சாம்சங் நிறுவன இரண்டிலுமே களைக்கட்டியது இதனாலேயே கடந்த ஆண்டில் சாம்சங் நிறுவனம் முதலிடம் வர முக்கிய காரணமாக அமைந்தது.