ஊழியர்களின் சம்பளம் பாதியாக குறைப்பு! அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரும் விப்ரோ
செய்தி முன்னோட்டம்
உலகில் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துவரும் நிலையில், ஐடி நிறுவனங்கள் சமீபத்திய மாதங்களாகவே பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. அந்த வகையில், விப்ரோ நிறுவனம் புதிய ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிய ஊழியர்களுக்கு வழங்கிய ரூ.6.5 லட்சம் ஆண்டு ஊதியம் பாதியாக குறைக்கப்படும் என புதிய ஊழியர்களுக்கு ஒரு அஞ்சல் அனுப்பப்பட்டது.
அதாவது, 2022 - 2023 பயிற்சி முடித்த புதிய ஊழியர்களுக்கு ரூ.6.5 லட்சம் பேக்கேஜை வழங்கி இருந்த நிலையில் தற்போது சர்வதேச நிச்சயமற்ற தன்மை மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்களை பெறுவதில் தாமதம் போன்ற காரணங்களினால் சம்பள பேக்கேஜ் 3.5 லட்சம் ரூபாயாகக் குறைத்து அறிவித்துள்ளது.
விப்ரோ நிறுவனம்
ஊழியர்களின் 50% சம்பளத்தை குறைத்த விப்ரோ நிறுவனம் - காரணம் என்ன?
மேலும், இந்த ஆஃபரை மாணவர்கள் ஏற்றக் கொண்டால், அவர்கள் மார்ச் முதல் ஆன்போர்டு செய்யப்படுவார்கள். மேலும் முந்தைய சலுகைகள் அனைத்தும் செல்லாது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். ஏனெனில் இது காலக்கெடுவுக்கு உட்பட்டது என்று தெரிவித்துள்ளது.
இதற்கு முன் விப்ரோ நிறுவனத்தின் வெளியான அறிவிப்பில், விப்ரோ நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 80 சதவீத ஊழியர்களுக்குச் சராசரியாக வேரியபிள் பே தொகையில் 87 சதவீதம் அளிக்கும் என அந்நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.