விப்ரோ ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! 87சதவீதம் வேரியபிள் பே தொகை அறிவிப்பு!
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தனது ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும், அளிக்கப்படும் வேரியபிள் தொகையை, ஊழியர்களுக்கு 100 சதவீதம் விப்ரோ உட்பட நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு அளித்தது. அதேப்போல், இந்த ஆண்டிற்கான விப்ரோ நிறுவனம் வேரியபிள் பே தொகையை அறிவித்துள்ளது. அதன்படி, விப்ரோ இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் டிசம்பர் காலாண்டுக்கு அதன் ஊழியர்களுக்கான வேரியபிள் பே தொகை 87 சதவீதம் அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்தத் தொகை அனைவருக்கும் கிடைக்குமா என்றால் அது தான் இல்லை.
87 சதவீதம் வேரியபிள் தொகையை ஊழியர்களுக்கு அளிக்கும் விப்ரோ நிறுவனம்
அதாவது, விப்ரோ நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 80 சதவீத ஊழியர்களுக்குச் சராசரியாக வேரியபிள் பே தொகையில் 87 சதவீதம் அளிக்கும் என அந்நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த 80 சதவீத ஊழியர்கள் பிரிவில் விப்ரோ நிறுவனத்தின் A டூ B3 பேண்ட் ஊழியர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதனால், விப்ரோ நிறுவனத்தின் பிரஷ்ஷர்கள் முதல் டீம் லீடர் பதவிகளில் இருப்பவர்கள் வரையில் அடங்குவார்கள். 80 சதவீத வேரியபிள் பே அளிக்கப்பட்டாலும், ஒவ்வொரு அணியில் ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் இந்த அளவீடு அதிகமாக இருக்கலாம். இதனால் விப்ரோ ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விப்ரோ நிர்வாகம் கடந்த காலாண்டில் அனைத்து ஊழியர்களுக்கும் 100 சதவீத வேரியபிள் பே அளித்தது குறிப்பிடத்தக்கது