LOADING...
நீட் தேர்வு முறைகேடு பின்னணி: டெலிகிராம் செயலிக்கு தடை, ஆனால் வாட்ஸ்அப் தப்பித்தது எப்படி?
மத்திய அரசு இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தடை விதித்துள்ளது

நீட் தேர்வு முறைகேடு பின்னணி: டெலிகிராம் செயலிக்கு தடை, ஆனால் வாட்ஸ்அப் தப்பித்தது எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 16, 2026
05:10 pm

செய்தி முன்னோட்டம்

ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வுக்கு முன்னதாக, போலி வினாத்தாள்களை விற்பனை செய்யவும், வதந்திகளைப் பரப்பவும் மோசடி செய்பவர்கள் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்துவதாகத் தேசிய தேர்வு முகமை (NTA) குற்றம் சாட்டியுள்ளது. இதன் அடிப்படையில், மத்திய அரசு இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தடை விதித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதோடு, இதே போன்ற சேவைகளை வழங்கும் வாட்ஸ்அப் செயலி ஏன் தடை செய்யப்படவில்லை என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

கட்டமைப்பு

மோசடியாளர்களின் புகலிடமாக மாறும் டெலிகிராம் கட்டமைப்பு

டெலிகிராம் செயலியின் தனித்துவமான வடிவமைப்பு, அதன் பயனர்களுக்குக் கூடுதல் ரகசியத்தன்மையை வழங்குகிறது. வாட்ஸ்அப் போலன்றி, இதில் மொபைல் எண்களை மறைத்துவிட்டு வெறும் பயனர் பெயரை (Username) மட்டும் கொண்டு கணக்குகளை இயக்க முடியும். மேலும், வரம்பற்ற சந்தாதாரர்களைக் கொண்ட சேனல்களை உருவாக்கி, தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் லட்சக்கணக்கானோரை மோசடியாளர்கள் எளிதில் சென்றடைய முடிகிறது.

தவறான பயன்பாடு

கோப்பு பகிர்வு மற்றும் செய்தி திருத்த வசதிகளின் தவறான பயன்பாடு

டெலிகிராமில் எவ்வித சுருக்கமும் இன்றி 2 ஜிபி வரையிலான பெரிய கோப்புகளைப் பகிர முடியும் என்பதால், போலி வினாத்தாள்களை பரப்புவது எளிதாகியுள்ளது. அதுமட்டுமின்றி, பழைய செய்திகளின் நேரத்தை மாற்றாமல், உள்ளடக்கத்தை மட்டும் எடிட் செய்து PDF கோப்புகளாக மாற்றும் வசதியை மோசடி கும்பல் தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இந்த ஆபத்தை உணர்ந்த தேர்வு முகமையின் எச்சரிக்கையை தொடர்ந்து, தற்காலிகமாக இந்த செய்தி திருத்த வசதியும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

Advertisement

காரணங்கள்

வாட்ஸ்அப் தப்பித்ததற்கான பாதுகாப்பு காரணங்கள்

அரசு உத்தரவுகளுக்கு இணங்கி செயல்படும் மெட்டா நிறுவனம், வாட்ஸ்அப் தளத்தில் பொதுக்குழுக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கத் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. ஆனால், இந்தியாவில் அலுவலகம் இல்லாத டெலிகிராம் நிறுவனம், அரசாங்கங்களின் வழிகாட்டுதல்களுக்குக் கட்டுப்பட மறுப்பதோடு, அதன் உள்ளடக்கங்களைச் சுயாதீனமாக ஒழுங்குபடுத்தும் திறனையும் கொண்டிருக்கவில்லை. இந்த தீவிர கண்காணிப்புக் குறைபாடே, வாட்ஸ்அப்பைத் தவிர்த்து டெலிகிராம் மட்டும் கடுமையான தடைகளைச் சந்திக்க முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.

Advertisement