Page Loader
பயனர்களுக்கான புதிய பாதுகாப்பு - வாட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்
வாட்ஸ்அப் பாதுகாப்பு பயனர்களுக்கான புதிய வசதி விரைவில் அறிமுகம்

பயனர்களுக்கான புதிய பாதுகாப்பு - வாட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்

எழுதியவர் Siranjeevi
Apr 03, 2023
08:04 pm

செய்தி முன்னோட்டம்

வாட்ஸ்அப் நிறுவனத்தை மெட்டா நிறுவனம் கைப்பற்றியதில் இருந்து பல்வேறு அம்சங்களை கொண்டு வந்துள்ளது. எனவே பயனர்களுக்கு சிறப்பான அம்சத்தை வழங்கும் வகையில் தற்போது பயனர்கள் பிரைவேட் சாட் Lock மற்றும் Hide செய்யும் வசதி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து WaBetaInfo வெளியிட்ட தகவலின்படி, வாட்ஸ்அப் பீட்டா ஆண்ட்ராய்டு 2.23.8.2 அப்டேட்டில் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால், புதிய அம்சமானது பயனர்களின் சாட்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. Contact மற்றும் Group-களில் பயனர்களின் தனிப்பட்ட முக்கிய சாட்களை லாக் செய்ய முடியும். லாக் பட்டியலில் இணைந்ததும், அதற்கான ஸ்கிரீனில் இருந்து மட்டுமே இயக்க முடியும். இதுமட்டுமின்றி, Lock chat-இல் புகைப்படம் மற்றும் வீடியோக்களும் சேர்க்கப்பட்டு இருப்பதால், அவை எதுவும் கேலரியில் சேமிக்கபடாது.

ட்விட்டர் அஞ்சல்

வாட்ஸ்அப் பயனர்கள் சாட் லாக் செய்துகொள்ளும் வசதியை கொண்டுவர உள்ளது