Page Loader
மெசேஜ் அனுப்பினால் எடிட் செய்யலாம்! ஐபோன் வாட்ஸ்அப்-க்கு புதிய வசதி
வாட்ஸ்அப் ஐபோன் பயனாளர்களுக்கு புதிய வசதி வர உள்ளது.

மெசேஜ் அனுப்பினால் எடிட் செய்யலாம்! ஐபோன் வாட்ஸ்அப்-க்கு புதிய வசதி

எழுதியவர் Siranjeevi
Mar 28, 2023
06:34 pm

செய்தி முன்னோட்டம்

வாட்ஸ்அப் செயலிலை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்கள் தனியுரிமையின் பாதுகாப்புகாக்கவும், அவர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் தொடர்ச்சியாக பல்வேறு அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. சமீபத்தில், டெஸ்க்டாப் வீடியோ கால் பேசும் வதியை அறிமுகம் செய்யப்போவதாக கூறியிருந்தது. இந்த நிலையில், அனுப்பிய குறுஞ்செய்தியை எடிட் செய்யும் வசதியை வழங்குவதற்கு வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது. இந்த புதிய அம்சமானது அனுப்பிய குறுஞ்செய்தியை அழிப்பதற்கு பதிலாக ஏற்பட்ட பிழையை சரிசெய்யும் வகையில் எடிட் செய்ய முடியும் எனக்கூறப்படுகிறது. இதற்கு 15நிமிடம் வரை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதற்குள் எடிட் செய்துகொள்ள வேண்டும். இது மெசேஜ்களை எடிட் செய்வதற்கு மட்டுமே பயன்படும்.

வாட்ஸ்அப் அப்டேட்

ஐபோன் பயனாளர்களுக்காக புதிய அம்சத்தை கொண்டு வரும் வாட்ஸ்அப் நிறுவனம்

இந்த புதிய அம்சமானது ஐஓஎஸ் பயனாளர்களுக்கும் மட்டுமே வழங்கப்படுகிறது. விரைவில் பீட்டா வெர்சனுக்கும் வழங்கப்பட உள்ளது. அதன்பின்னர் ஆண்ட்ராய்டு பயன்பாட்டுக்கு வரும். இதுமட்டுமின்றி IOS பயனாளர்களுக்காக வீடியோ மெசேஜ் அனுப்பு வசதியும் வழங்கப்பட உள்ளது. இதனை பயன்படுத்தி 60 நொடிகளுக்கு சிறிய வீடியோவை பகிர்ந்து கொள்ள முடியும். ஏற்கனவே இதுபோன்ற அம்சம் டெலிகிராம் செயலி பயன்பாட்டில் உள்ளது. தற்போது அதேபோன்று வாட்ஸ்அப்பிலும் கொண்டு வர உள்ளனர். இவை கேமரா பட்டனை க்ளிக் செய்து வீடியோவாக பதிவு செய்து அனுப்பமுடியும்.