தேர்ட்-பார்ட்டி ஏஐ ஏஜெண்டுகளுடன் நேரடியாக சாட் செய்யும் புதிய வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி, பயனர்கள் தங்களது கணக்குடன் தேர்ட்-பார்ட்டி ஏஐ ஏஜெண்டுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாட்களை நேரடியாக இணைத்து சாட் செய்யும் புதிய வசதியைத் தீவிரமாக சோதித்து வருகிறது. இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் வேறு செயலிகளுக்கோ அல்லது வெளி இணையதளங்களுக்கோ செல்லாமல், வாட்ஸ்அப் செயலினுள்ளேயே பிரத்யேக சாட் த்ரெட்கள் மூலம் தங்களுக்குப் பிடித்த ஏஐ சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். தற்போது குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டும் சோதனை முறையில் இது வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பொதுப் பயன்பாட்டிற்கு வரும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
இணைப்பு வசதி
API Key மூலம் 5 ஏஐ ஏஜெண்டுகளை இணைக்கும் வசதி
வாட்ஸ்அப் பீட்டா ஆண்ட்ராய்டு பதிப்பில் இந்த புதிய அம்சம் கண்டறியப்பட்டுள்ளது.
பயன்பாட்டின் அமைப்புகள் பகுதியில் ஏஜெண்ட்ஸ் என்ற புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு கணக்கிற்கு அதிகபட்சமாக ஐந்து ஏஐ ஏஜெண்டுகள் வரை தனித்தனி பெயர்கள் மற்றும் சுயவிவரப் படங்களுடன் பயனர்கள் சேர்க்க முடியும்.
இந்த ஏஐ சேவைகளை வாட்ஸ்அப் கணக்குடன் இணைக்கப் பிரத்யேக ஏபிஐ சாவி பயன்படுத்தப்படுகிறது.
இந்த அமைப்பை பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கவும் அல்லது ரத்து செய்யவும் வசதி உள்ளது.
பாதுகாப்பு
தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கான பிரத்யேக கட்டுப்பாடுகள்
இணைக்கப்பட்ட ஏஐ ஏஜெண்டுகள் அதற்கென ஒதுக்கப்பட்ட தனிப்பட்ட சாட் உரையாடலுக்கு மட்டுமே அணுகல் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனரின் பிற தனிப்பட்ட சாட்கள், தொடர்புகள் அல்லது ஊடகக் கோப்புகளை இந்த ஏஐ ஏஜெண்டுகளால் அணுக முடியாது.
மேலும், குழு உரையாடல்கள் மற்றும் சமூகங்களில் ஏஐ ஏஜெண்டுகளை சேர்க்க முடியாது என்பதால் பிற பயனர்களின் தனியுரிமை முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது.
இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசியாமல் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
விரிவாக்கம்
எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மற்றும் பயன்பாட்டு விரிவாக்கம்
இந்த ஏஐ ஏஜெண்டுகளுடனான சாட்கள் மெட்டாவின் சேவையகம் வழியாக தேர்ட்-பார்ட்டி ஏஐ உருவாக்குநர்களுக்கு அனுப்பப்படுவதால், வழக்கமான எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பு இவற்றிற்கு பொருந்தாது எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், பயனர்களின் தரவு பாதுகாப்பை உறுதி செய்யக் கூடுதல் கட்டுப்பாடுகளை வாட்ஸ்அப் நிறுவனம் விதித்துள்ளது.
தற்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ள இந்த வசதி, வரும் மாதங்களில் முழுமையாக சோதிக்கப்பட்டு அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் உலகளவில் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.