குறுஞ்செய்திகளை 'எடிட்' செய்யும் வசதி.. அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது வாட்ஸ்அப்!
வாட்ஸ்அப்பில் பீட்டா பயனாளர்களுக்கு வெளியிடப்பட்டிருந்த, குறுஞ்செய்திகளை எடிட் (Edit) செய்யும் வசதியானது தற்போது அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது. அடுத்து வரும் நாட்களில் அனைத்து பயனர்களும் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் வாட்ஸ்அப்பில் நாம் அனுப்பும் குறுஞ்செய்தியை 15 நிமிடங்களுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் எடிட் செய்து கொள்ள முடியும். ஒரு குறுஞ்செய்தி எடிட் செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும் விதமாக அந்த குறுஞ்செய்திக்கு அருகில் 'Edited' எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். வாட்ஸ்அப்பை அப்டேட் செய்தபின் இந்த வசதியைப் பயன்படுத்த, குறிப்பிட்ட குறுஞ்செய்தியை லாங்-பிரஸ் செய்து, பின்னர் எடிட் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட குறுஞ்செய்தி செயலிகளில் ஏற்கனவே இந்த வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது.