LOADING...
வாட்ஸ்அப்பில் ஆடியோ மெசேஜ் அனுப்புபவரா நீங்க? இனி ஆப்பையே ஓபன் பண்ண வேண்டாம்! ஹோம் ஸ்கிரீனில் வரும் புதிய விட்ஜெட்
வாட்ஸ்அப்பில் ஆடியோ மெசேஜ் அனுப்புபவர்களுக்கு புது அப்டேட் வருகிறது

வாட்ஸ்அப்பில் ஆடியோ மெசேஜ் அனுப்புபவரா நீங்க? இனி ஆப்பையே ஓபன் பண்ண வேண்டாம்! ஹோம் ஸ்கிரீனில் வரும் புதிய விட்ஜெட்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 20, 2026
10:54 am

செய்தி முன்னோட்டம்

உலகில் மிகப்பிரபலமான குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களின் பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு புதுப்பிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக மிக முக்கியமான ஒரு புதிய விட்ஜெட் வசதியை மெட்டா நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் வாட்ஸ்அப் செயலியைத் திறக்காமலேயே தங்களது மொபைலின் ஹோம் ஸ்கிரீனில் இருந்தே நேரடியாக வாய்ஸ் நோட்டுகளைப் பதிவு செய்து அனுப்ப முடியும்.

ஹோம் ஸ்கிரீன்

ஹோம் ஸ்கிரீனில் வாய்ஸ் மெசேஜ் ஷார்ட்கட்

வாட்ஸ்அப் அம்சங்களைக் கண்காணிக்கும் டபிள்யூஏபீட்டாஇன்போ (WABetaInfo) அறிக்கையின்படி, இந்த புதிய வசதி ஆண்ட்ராய்டு பீட்டா (Android Beta v2.26.24.2) பதிப்பில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விட்ஜெட் மொபைலின் ஹோம் ஸ்கிரீனில் ஒரு எளிய ஷார்ட்கட் போல செயல்படும். இதன் ஆரம்ப வடிவமைப்பு 3x1 என்ற அளவில் (3x1 Format) இருக்கும் என்றும், பயனர்கள் தங்களின் தேவைக்கேற்ப இதன் அளவை மாற்றியமைத்துக் கொள்ளும் (Resize) வசதியும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதில் உள்ள மைக் குறியீட்டைத் தொடுவதன் மூலம் உடனடியாக ஆடியோவை ரெக்கார்ட் செய்ய முடியும்.

வசதி

ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பும் வசதி

தற்போதைய நடைமுறைப்படி, ஒருவருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், வாட்ஸ்அப் செயலியைத் திறந்து, குறிப்பிட்ட சாட்டிற்குள் சென்று, மைக் பட்டனை அழுத்திப் பிடிக்க வேண்டும். அதே மெசேஜை பலருக்கு அனுப்ப வேண்டும் என்றால் ஃபார்வர்டு செய்ய வேண்டும். ஆனால், வரவிருக்கும் இந்த புதிய விட்ஜெட் மூலம் ஹோம் ஸ்கிரீனில் ஆடியோவை ரெக்கார்ட் செய்தவுடன், அதனை யாருக்கு அனுப்ப வேண்டும் என்ற காண்டாக்ட் பட்டியல் தோன்றும். அதில் ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைத் தேர்ந்தெடுத்து அந்த வாய்ஸ் மெசேஜை அனுப்பிக் கொள்ள முடியும். இது பயனர்களின் நேரத்தைப் பெரிதும் மிச்சப்படுத்தும்.

Advertisement

ஸ்டேட்டஸ் அப்டேட்

வாய்ஸ் நோட் மூலம் நேரடி ஸ்டேட்டஸ் அப்டேட்

இந்த புதிய விட்ஜெட் மூலம் பதிவு செய்யப்படும் ஆடியோக்களைக் காண்டாக்டுகளுக்கு அனுப்புவதோடு மட்டுமின்றி, நேரடியாக உங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் ஆடியோ பதிவாகப் பகிர்ந்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் கருத்துக்களை உடனுக்குடன் தங்களின் குரலிலேயே ஸ்டேட்டஸாக வைக்க முடியும்.

Advertisement

வெளியீட்டு விபரம்

புதிய ஸ்டேட்டஸ் விட்ஜெட் மற்றும் வெளியீட்டு விபரம்

வாய்ஸ் மெசேஜ் விட்ஜெட் தவிர, வாட்ஸ்அப் நிறுவனம் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்காகவே பிரத்யேகமான மற்றொரு ஹோம் ஸ்கிரீனும் விட்ஜெட்டையும் உருவாக்கி வருகிறது. இதன் மூலம் ஆப்பைத் திறக்காமலேயே நண்பர்களின் சமீபத்திய ஸ்டேட்டஸ் அப்டேட்களைப் பார்க்கவும், புதிய ஸ்டேட்டஸ்களை உடனடியாக உருவாக்கவும் முடியும். இந்த இரண்டு விட்ஜெட் அம்சங்களும் தற்போது ஆரம்பகட்ட உருவாக்கத்தில் உள்ளதால், முதற்கட்டமாகப் பீட்டா டெஸ்டர்களுக்குக் கொண்டு வரப்பட்டு, அதன் பின்னரே அனைத்து நிலையான பயனர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement