Page Loader
உலகளவில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியது
எனினும், சில மணிநேரங்களிலேயே இந்த செயலிழப்பு சரி செய்யப்பட்டது

உலகளவில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியது

எழுதியவர் Venkatalakshmi V
Apr 04, 2024
08:34 am

செய்தி முன்னோட்டம்

புதன்கிழமை இரவு உலகளாவிய பல பயனர்களுக்கு மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமின் சேவைகள் முடங்கியது. எனினும், சில மணிநேரங்களிலேயே இந்த செயலிழப்பு சரி செய்யப்பட்டது. சேவைகள் மீண்டும் மீட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த செயலிழப்பின் போது, பல ​​பயனர்கள் செய்திகளையும், மீடியா கோப்புகளையும் அனுப்ப முடியவில்லை என புகார் தெரிவித்தனர். அதோடு தளத்தின் மொபைல் பயன்பாட்டில் உள்நுழைய முயற்சிக்கும் பயனர்கள் எர்ரர் மெசஜை எதிர்கொண்டனர். பயனர்கள் செய்திகளை அனுப்ப முடியாது மற்றும் WhatsApp ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் போன்ற சேவைகளைப் பயன்படுத்த முடியாது என எரர் மெசேஜ் வந்தது. ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, இந்தியாவில் 30,000க்கும் மேற்பட்ட பயனர்கள், யுனைடெட் கிங்டமில் 67,000க்கும் அதிகமானோர் மற்றும் பிரேசிலில் 95,000 பயனர்கள் இயங்குதளத்தில் சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர்.

embed

வாட்ஸ்அப் முடக்கம் 

WhatsApp down again! Anyone else facing issues? Let's hope it's back up soon. #WhatsAppDown #WhatsApp— Dua Fatima (@DuaFatima_DF) April 3, 2024

embed

வாட்ஸ்அப் முடக்கம் 

And we're back. Happy chatting!— WhatsApp (@WhatsApp) April 3, 2024