மே மாதம் மட்டும், இந்தியாவில் 65 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப்
செய்தி முன்னோட்டம்
இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021-ன் கீழ், தங்கள் தளத்தில், கடந்த மே மாதம் மட்டும், இந்தியாவில் 65 லட்சம் கணக்குகளை முடக்கியிருப்பதாக தங்களது மாதாந்திர அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது, வாட்ஸ்அப் நிறுவனம்.
ஒவ்வொரு மாதமும் பயனாளர்களின் புகார்கள் அடிப்படையில், ஒவ்வொரு தளத்திலும் என்னென்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த அறிக்கையை, அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் வெளியிடுவது வழக்கம்.
அப்படி வெளியிடப்பட்ட, மே மாதத்திற்கான அறிக்கையில் மேற்கூறிய தகவலைக் குறிப்பிட்டிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.
இந்திய சட்ட விதிமீறல் மற்றும் வாட்ஸ்அப் விதிமுறைகளின் விதமீறல் ஆகிய காரணங்களுக்காக மேற்கூறிய 65 லட்சம் கணக்குகளும் முடக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது வாடஸ்அப்.
வாட்ஸ்அப்
பயனாளர்களின் தகவல் பாதுகாப்பை மேம்படுத்த புதிய வசதிகள்:
இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 500 மில்லியன் பயனாளர்களைக் கொண்டிருக்கிறது வாட்ஸ்அப். தங்கள் தளத்தில் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.
ஏப்ரல் மாதமும், இதே போல் தங்கள் தளத்தில் 75 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் நிறுவனமானது, தங்களுடைய தளத்தில் பயனர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், பயனர்களின் வசதிக்காகவும் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறுத.
அதன் ஒரு பகுதியாக QR கோடைக் கொண்டு வாட்ஸ்அப் செயலியின் மூலமாகவே புதிய சாதனத்திற்கு சாட் ஹிஸ்டரியை பரிமாறிக் கொள்ளும் புதிய வசதியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.