வாட்ஸ்அப்பின் பயனர் தரவுகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக எலான் மஸ்க் குற்றசாட்டு; மறுக்கும் வாட்ஸ்அப் தலைவர்
வாட்ஸ்அப் தலைவர் வில் கேத்கார்ட், எலான் மஸ்க் கூறிய குற்றச்சாட்டை மறுத்துள்ளார். முன்னதாக எலான் மஸ்க் எக்ஸ்-இல்,"WhatsApp ஒவ்வொரு இரவும் உங்கள் பயனர் தரவை ஏற்றுமதி செய்கிறது. சிலர் இன்னும் அது பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள்." எனத்தெரிவித்திருந்தார். பதிலுக்கு, கேத்கார்ட், WhatsApp பயனர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது என்றும் பயனர்களின் தரவை ஏற்றுமதி செய்வதில்லை என்று வலியுறுத்தினார். மேலும்,"நாங்கள் பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். அதனால்தான் நாங்கள் உங்கள் செய்திகளை என்க்ரிப்ட் செய்கிறோம். அவை ஒவ்வொரு இரவும் எங்களுக்கு அனுப்பப்படுவதில்லை அல்லது எங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில்லை" எனக்கூறினார்.
பயனர் தரவு பேக்அப்பில், WhatsApp இன் நிலைப்பாட்டைதெளிவுபடுத்திய கேத்கார்ட்
பயனர் தரவு, குறிப்பாக செய்தி மெசேஜ் பேக்அப்புகள் தொடர்பான WhatsApp கொள்கையை கேத்கார்ட் மேலும் தெளிவுபடுத்தினார். பயனர்கள் தங்கள் மெசேஜ்களை பேக்அப் எடுக்க விரும்பினால், தங்கள் கிளவுட் ப்ரொவைடரை பயன்படுத்தலாம், அதற்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார். மஸ்க் மற்றும் மெட்டா (WhatsApp இன் தாய் நிறுவனம்) இடையே நடந்து வரும் மோதல், 2022இல் X-ஐ மஸ்க் பொறுப்பேற்றதில் இருந்து விவாதப் பொருளாகவே உள்ளது. குறிப்பாக எக்ஸ் உடன் நேரடியாக போட்டியிடும் மெட்டாவின் திரட்ஸ் செயலியை அறிமுகப்படுத்திய பிறகு, மஸ்க் மற்றும் Meta இடையேயான போட்டி அதிகரித்து வருகிறது.மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கை மல்யுத்தத்திற்கு வருமாறு மஸ்க் சவால் விடுத்தபோது இந்த பதற்றம் மேலும் அதிகரித்தது