Page Loader
வாட்ஸ் அப்பில் விரைவில் அறிமுகமாகும் Chatbot - எப்படி செயல்படும்?
வாட்ஸ் அப் சாட்போட் விரைவில் அறிமுகம்

வாட்ஸ் அப்பில் விரைவில் அறிமுகமாகும் Chatbot - எப்படி செயல்படும்?

எழுதியவர் Siranjeevi
Jan 28, 2023
06:05 pm

செய்தி முன்னோட்டம்

வாட்ஸ் அப் நிறுவனம் அன்றாடம் பல அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் மக்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களின் புகார்களை பதிவு செய்யவும், வாட்ஸ் அப் சாட்போட் அறிமுகப்படுத்த குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த சாட்போட்டை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பிப்ரவரி 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தி வைக்கிறார். இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், மக்கள் மற்றும் கமிஷன் மிகவும் பயனுள்ள முறையில் தொடர்பு கொள்ள சாட்போட் உதவும். புகார் பதிவு, தகவலைத் தேடுதல் மற்றும் புகார் நிலையைக் கண்காணிப்பது போன்ற முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெறும் என கூறினார்.

வாட்ஸ் அப் சாட்போட்

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வாட்ஸ் அப் சாட்போட் விரைவில் அறிமுகம்

மேலும், குழந்தைகள், பெண்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் தகவல் தொடர்புகளுக்கு ஆணையத்தால் இந்த வசதி பயன்படுத்தப்படும் என குறிப்பிட்டார். இந்த chat bot என்பது மனிதரை போலவே வாடிக்கையாளருடன் பேசுவதற்கான கணினி மூலம் இயக்கப்படுகிறது. இதில் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சாட் பாட்டை பல நிறுவனங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வருகிறது. Chatbot தொழில்நுட்பத்தின் அடிப்படை natural language processing என்பதாகும். அதாவது, கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (Apple's SIRI), மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கார்டனா (Microsoft Cortana) ஆகியவற்றிலும் இந்த தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்படுகிறது.