45 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கிய மெட்டா - காரணம் என்ன?
உலகில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் மெட்டா நிறுவனம் பயனர்கள் பாதுகாப்பு அறிக்கையை ஒவ்வொரு மாதமும் வெளியிடுகிறது. அடிக்கடி பல அப்டேட்களை வெளியிடும் வாட்ஸ்அப் நிறுவனம் பாதுகாப்பு அம்சத்திற்காக பிப்ரவரி மாதத்தில் 45 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பிப்ரவரி மாதத்தில், 4 லட்சத்து 59 ஆயிரத்து 7ஆயிரத்து 400 வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2,804 வாட்ஸ் ஆப் பயனாளர்கள் புகாரின் பெயரில் 504 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த நடவடிக்கை ஆனது, மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.