அக்டோபரில் புதிய பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிடவிருக்கும் கூகுள்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்களது பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை உலகம் முழுவதும் வெளியிட்டது கூகுள். கடந்த மே மாதம், பிக்சலின் 7 சீரிஸின் பட்ஜெட் மாடலான 7a-வை வெளியிட்டது அந்நிறுவனம். அதனைத் தொடர்ந்து தற்போது தங்களுடைய புதிய ஃப்ளாக்ஷிப் சீரிஸான பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் அக்டோபர் மாதம் வெளியிட கூகுள் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போதைய பிக்சலை விட அனைத்து வகையில் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய பிக்சல் 8-ஐ அந்நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாஃப்ட்வேர் மேம்பாடுகளுடன், பிக்சல் 8 சீரிஸின் டிசைனிலும் நாம் புதுமையை எதிர்பார்க்கலாம். மேலும், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்துடன் இந்த புதிய பிக்சல் 8 சீரிஸை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
என்னென்ன வசதிகளைக் கொண்டு வெளியாகவிருக்கிறது பிக்சல் 8 ப்ரோ:
120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட மற்றும் 1,600 நிட்ஸ் அதிகபட்ச வெளிச்சத்தை வெளிப்படுத்தும், 6.7 இன்ச் LTPO OLED டிஸ்பிளே, டென்சார் G3 சிப், 12GB ரேம், 128/256GB ஸ்டோரேஜ் ஆகிய வசதிகளை கொண்டு வெளியாகவிருக்கிறது பிக்சல் 8 ப்ரோ. 50MP OIS சென்சார்+ 64MP அல்ட்ராவைடு சென்சார்+ 48MP டெலிபோட்டோ சென்சார் என ட்ரிபிள் கேமரா செட்டைப்பைக் பிக்சல் 8 ப்ரோவில் கொடுக்கவிருக்கிறது கூகுள். 4,950mAh பேட்டரி, 27W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 12W Qi வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், வைபை 7, வெப்பத்தை அளவிடும் சென்சார், அல்ட்ராசானிக் FP ஆகிய வசதிகளும் புதிய பிக்சல் 8 ப்ரோவில் கொடுக்கப்படவிருக்கின்றன.