ஏலியன்கள் உண்மையில் இருக்கின்றதா: ISRO தலைவர் கூறுவது என்ன
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத், சமீபத்தில் ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அப்போது அவர், எதிர்காலத்தில் நமது முன்னேற்றங்களை நாம் திட்டமிடும்போது, மிகவும் மேம்பட்ட வேற்று கிரக நாகரிகங்களை எதிர்கொள்ளும் சாத்தியம் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்த நாகரிகங்கள், அவற்றின் வளர்ச்சியில் மிகவும் முன்னேறியிருக்கலாம், பிரபஞ்சத்தில் அவற்றின் இருப்பு நமக்கு கிட்டத்தட்ட புலப்படாது, நமது தற்போதைய அறிவியல் புரிதலுக்கு எதிரான வழிகளில் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளும் திறன் காரணமாக இருக்கலாம் எனத்தெரிவித்துள்ளார்.
Twitter Post
சாத்தியமான அபாயங்கள் உள்ளது என எச்சரிக்கும் சோம்நாத்
வேற்று கிரக வாழ்க்கையின் சாத்தியக்கூறுகள் குறித்து ISRO தலைவர் சோம்நாத் நம்பிக்கையை தெரிவித்த அதே நேரத்தில், அத்தகைய நாகரிகங்களுடன் தொடர்பு கொள்வதில் உள்ள சாத்தியமான அபாயங்கள் குறித்தும் கவலை தெரிவித்தார். பூமியில் காணப்படுவதை விட வேற்று கிரக வாழ்க்கை வடிவங்கள் முற்றிலும் வேறுபட்ட மரபணு மற்றும் புரத கட்டமைப்புகளைக் கொண்டிருக்கலாம் என்று அவர் எச்சரித்தார். இந்த அடிப்படை உயிரியல் வேறுபாடு குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக அவற்றின் அமைப்பில் மிகவும் வேறுபட்ட வாழ்க்கை வடிவங்களுக்கிடையேயான தொடர்புகளின் பின்னணியில் அபாயங்கள் கொண்டிருக்கலாம் என்றார். அத்தகைய சந்திப்புகள், தொடர்புகளின் தன்மையைப் பொறுத்து, ஆதிக்கம் அல்லது மோதலுக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.