Vodafone Idea 5ஜி சேவை அப்டேட்: வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!
இந்தியாவில் தற்போது ஜியோ, ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. ஏர்டெல் 5ஜி சேவையை கேரளாவில் தொடங்கிய நிலையில், ஜியோ நிறுவனம் இந்தியா முழுவதும் வழங்கி வருகிறது. இவர்களைத்தொடர்ந்து, வோடஃபோன் ஐடியா நிறுவனம் 5ஜி சேவைப்பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வந்தது. இந்நிலையில், Vi (Vodafone Idea), தற்போது வாடிக்கையாளர்களை மேம்படுத்தும் வகையில், 5G ஸ்மார்ட்போன்களில் தடையற்ற 5G இணைப்பை வழங்குவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அந்த வகையில், மோட்டோரோலாவுடன் வோஃபோன் ஐடியா நிறுவனம் கைகோர்த்துள்ளது. மோட்டோரோலா ஸ்மாரட்போன்களில் Vi 5ஜி சேவை தொடக்கம்: motorola மற்றும் Vi ஆகியவை வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், 5G ஸ்மார்ட்போன்களில் தடையற்ற 5G நெட்வொர்க்கை வழங்க கூட்டு சேர்ந்துள்ளன.
மோட்டோவுடன் இணைந்து 5ஜி சேவையை வெளியிடும் வோடஃபோன் ஐடியா நிறுவனம்
இதுகுறித்து, மோட்டோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கையில், டெல்லியில் மோட்டோவின் பிரபல 5ஜி ஸ்மார்ட்போனை வோடஃபோன் ஐடியா நெட்வொர்க்கின் 5ஜி பேண்ட்வித்தில் வைத்து சோதனை செய்துள்ளதாக தெரிவித்தனர். மோட்டோவில், குறைந்த விலை முதல் பிரீமியம் ஸ்மார்ட்போன் வரை அதிக 5ஜி பேண்ட்களை கொண்டுள்ளன. எனவே, Moto g62 5G உட்பட மோட்டோவின் அனைத்து 5G ஸ்மார்ட்போன்களும் குறைந்தது 11 முதல் 13 வரையிலான 5G பேண்டுகளை கொண்டுள்ளன. 5ஜி சேவை கொண்ட மோட்டோ போன்கள் மோட்டார்லா எட்ஜ் 30 அல்ட்ரா மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் மோட்டார் சைக்கிள் G62 5G மோட்டோரோலா எட்ஜ் 30 மோட்டோ ஜி82 5ஜி மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ Moto G71 5G