
விவோ V27 ப்ரோ.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
செய்தி முன்னோட்டம்
V25 ப்ரோவுக்கு மாற்றாக அப்டேட் செய்யப்பட்ட V27 ப்ரோ மாடலை வெளியிட்டது விவோ. குறைவான எடை, சூரிய ஒளியில் மாறும் பின்பக்க நிறம் என V சீரிஸில் வழங்கி வரும் வசதிகளை இந்த மொபைலிலும் வழங்கியிருக்கிறது விவோ.
வசதிகள்:
6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே
மீடியாடெக் டைமன்சிட்டி 8200 ப்ராசஸர்
50MP+8MP+2MP ரியர் கேமரா: 50MP செல்ஃபி கேமரா
4,600 mAh பேட்டரி 5G வசதி
ஆண்ட்ராய்டு 13
விலை:
8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் - ரூ.37,999
8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் - ரூ.39,999
12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் - ரூ.42,999
மொபைல் ரிவ்யூ
பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது?
ப்ளஸ்:
சிறந்த கேமரா, சிறப்பான பெர்ஃபாமன்ஸ், சிறந்த பேட்டரி லைஃப்
மைனஸ்:
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் IP ரேட்டிங் இல்லாதது, விரைவாக சூடாவது, நிறைய ப்ளாட்வேர்கள் இருப்பது.
ரிவ்யூ:
பார்த்தவுடன் கவரும் டிசைனை பெற்றிருக்கிறது இந்த விவோ V27 ப்ரோ.
கேமரா பெர்ஃபாமன்ஸ், பேட்டரி பெர்ஃபாமன்ஸ் மற்றும் ப்ராஸசரின் பெர்ஃபாமன்ஸ் என அனைத்தும் சிறப்பாக ஒரு ஆல்-ரவுண்டர் பெர்ஃபாமன்ஸைக் கொண்டிருக்கிறது இந்த V27 ப்ரோ.
ஸ்லிம்மாக இருப்பதால் சிறிது நேரப் பயன்பாட்டிற்கே சூடாகிவிடுவது மைனஸ்.
போட்டியாளர்கள் இதே விலையில் சில வசதிகளைக் கூடுதலாகக் கொடுக்கிறார்கள் தான். ஆனால், டிசைன் மற்றும் கேமராவிற்காகவே இந்த ஸ்மார்ட்போனையும் பரிசீலைனை செய்யலாம்.
சில ஆயிரம் விலை குறைவாகக் கிடைத்தால் இன்னும் சிறப்பு.