Page Loader
இன்சூரன்ஸ் கம்பெனியில் 2.5 கோடி முதலீடு! விராட் கோலி தகவல்கள் வெளியீடு!
Digit நிறுவனத்தில் இன்சூரன்ஸ் மூதலீடு செய்த விராட் கோலி தகவல்கள் வெளியானது

இன்சூரன்ஸ் கம்பெனியில் 2.5 கோடி முதலீடு! விராட் கோலி தகவல்கள் வெளியீடு!

எழுதியவர் Siranjeevi
Mar 31, 2023
05:42 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்காவும் டிஜிட்டல் ஜெனரல் இன்சூரன்ஸ் ஸ்டார்ட்அப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 2.5 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக Entracker நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த நிறுவனம் நிதி திரட்ட 84 மில்லியன் டாலர் IPO வெளியீட்டுக்கான ஒப்புதலை, செபியிடம் தாக்கல் செய்ததில் இந்த முதலீடு ஒரு பகுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், Go Digit Insurance நிறுவனம் 440 மில்லியன் மதிப்பிலான வரைவுத் தாள்களை மீண்டும் செபியிடம் தாக்கல் செய்துள்ளது. நிறுவனத்தின் பங்குகள் குறித்து கேள்வியில் சந்தை நிலை சரியில்லாத காரணத்தால் ஐபிஓ வெளியீட்டை நிராகரித்தது.

முதலீடு நிறுவனங்கள்

விராட்கோலி அனுஷ்கா சர்மா Digit நிறுவனத்தில் ரூ.2.5 கோடி ரூபாய் முதலீடு

எனவே, பங்கு உரிமைகளை மறுபரீசிலினை செய்யும் வரை IPO நிறுத்தி வைக்கப்படும் என ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. இதன்பின், Go Digi மார்ச் 27, 2023 வெளியிட்ட அறிக்கையில், சிறப்புத் தீர்மானத்தின் மூலம் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பின்னும், அதன் ஊழியர் பங்கு உரிமைகளை பங்கு விருப்பத் திட்டங்களுக்கு மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே, Go Digit நிறுவனம் மீண்டும் தனது IPO நவெளியீட்டுக்கான 440 மில்லியன் டாலர் வரைவுத் தாள்களை மீண்டும் செபியிடம் தாக்கல் செய்துள்ளது.