Page Loader
யூபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய போகிறீர்களா? இதை முதலில் படியுங்கள்
UPI பண பரிமாற்றம்

யூபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய போகிறீர்களா? இதை முதலில் படியுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 29, 2022
11:23 pm

செய்தி முன்னோட்டம்

பலரது அன்றாட வணிக நடவடிக்கைளில், இந்த யூபிஐ-உம் ஒரு அங்கம். கூகிள் பே, போன் பே, பே டிஎம் என ஏகப்பட்ட யூபிஐ பண பரிவர்த்தனை செயலிகள் உள்ளன. இது போதாதென்று வாட்சப் செயலியிலும், பணம் அனுப்பலாம். இதை ஒழுங்குபடுத்தவும், சீர்படுத்தவும், என்பிசிஐ அவ்வப்போது பல விதிமுறைகளை விதிப்பதுண்டு. அதன் தொடர்ச்சியாக, இப்போது பண பரிவர்த்தனைகளை உச்ச வரம்பு விதித்துள்ளது. அதன்படி, ஒரு நபர், UPI பயன்படுத்தி ரூ.1 லட்சம் வரை, பணபரிமாற்றம் செய்யலாம். அமேசான் பே: பதிவு செய்த முதல் 24 மணிநேரத்திற்கு, ரூ.5000 வரைதான் பண பரிமாற்றம் அனுமதி. பின்னர், ஒரே நாளில் ரூ. 1 லட்சம் வரை அனுப்பலாம். பேங்க்-ஐ பொறுத்து, ஒரே நாளில் 20 முறை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க

UPI பண பரிமாற்றம் வரம்பு

கூகுள் பே: தினசரி ரூ. 1 லட்சம் வரையிலான பணப் பரிமாற்றங்களை ஆதரிக்கிறது. அத்துடன், அனைத்து UPI ஆப்ஸ் மற்றும் வங்கிக் கணக்குகளிலும் பத்து பரிவர்த்தனை வரம்புகள் வரை இருக்கும். பே டிஎம்: பயனர்கள் ரூ.1 லட்சம் வரை பணம் அனுப்ப அனுமதிக்கிறது. பே டிஎம், ஒரு மணிநேர பரிமாற்ற வரம்பு 20,000, ஒரு மணி நேரத்திற்கு பரிவர்த்தனை விகிதம் ஐந்து, மற்றும் ஒரு நாளைக்கு அதன் பரிவர்த்தனை விகிதம் இருபது. போன் பே: UPI பரிவர்த்தனைகளுக்கு தினசரி நிர்ணயித்து இருப்பினும், வரம்பு வங்கிக்கு வங்கி மாறுபடலாம். கூடுதலாக, வங்கியின் வழிகாட்டுதல்களைப் பொறுத்து, ஒருவர் போன் பே வழியாக ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 அல்லது 20 பரிவர்த்தனைகளை செய்யலாம்.