இளைஞர்கள் எதிர்காலத்தை திட்டமிடக்கூடாது! ஊபர் CEO தாரா கோஸ்ரோஷாஹி அட்வைஸ்
இன்றைய இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ஊபர் நிர்வாக தலைமை அதிகாரியான தாரா கோஸ்ரோஷாஹி ஒரு அட்வைஸை தெரிவித்துள்ளார். உலகில் பல நிறுவனங்கள் தொழில் வளர்ச்சி பாதிப்பால் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இன்றைய இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஊபர் நிர்வாக அதிகாரி தாரா கோஸ்ரோஷாஹி அட்வைஸ் செய்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஊபர் நிறுவனைத்தில் பொறுப்பேற்றார் அவர். அவரைப் இல்லாமல் இளைஞர்களும் ஒரு குறிபிட்ட நேரத்திற்குள் வாழ்க்கையில் சில நிலைகளை அடைய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக CEO கொடுத்த அட்வைஸ்
இதற்கு முன் 16 ஆண்டுகள் பொறியியல் நிறுவனமான எக்ஸ்பீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்துள்ளார். ஐடி நிறுவனமான ஐஏசியில் இருந்து எக்ஸ்பீடியாவிற்கு மாறிய ஆவர் அங்கு 7 ஆண்டுகள் பணியை தொடர்ந்துள்ளார். 53 வயதான தாரா கோஸ்ரோஷாஹி இன்றைய இளைஞர்களிடம் தெரிவிக்கையில், "தங்கள் எதிர்காலம் குறித்து, அதிகமாக திட்டமிடக்கூடாது எனவும், இந்த தவறை பலரும் செய்வதாகவும், அவர் போல ஆக வேண்டும், அவரை போன்று பணம் சம்பாதிக்க வேண்டும் என கூறிவருகிறார்கள். எனவே, நீங்கல் செல்லும் திசையில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதை அப்படியே விட்டுவிடுங்கள்" என அறிவுறுத்தியுள்ளார்.