அடுத்த செய்திக் கட்டுரை

ட்விட்டரில் எழுந்த புதிய பிரச்சினை.. என்ன செய்யவிருக்கிறார் எலான் மஸ்க்?
எழுதியவர்
Prasanna Venkatesh
May 21, 2023
01:02 pm
செய்தி முன்னோட்டம்
ட்விட்டரில் 2 மணி நேரம் வரையிலான வீடியோக்கள் இனி பதிவேற்றம் செய்யலாம் என அத்தளத்தில் தன்னுடைய பதிவின் மூலம் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார் ட்விட்டரின் முன்னாள் சிஇஓ-வான எலான் மஸ்க்.
ட்விட்டரில் 2 மணி நேரம் அல்லது 8GB அளவுடைய வீடியோக்களை ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்கள் மட்டும் பதிவேற்றம் செய்யலாம்.
இதனைத் தொடர்ந்து பயனர்கள் பலரும் முழு நீள ஹாலிவுட் திரைப்படங்களை பதிவேற்றம் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.
மேலும், இதனை எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்ட பதிவிற்கு கீழேயே திரைப்படங்களை பதிவேற்றி வருகின்றனர்.
பதிப்புரிமை இல்லாத உள்ளடக்கங்களை ட்விட்டரில் பதிவேற்றுவது அந்நிறுவனக் கொள்கைகளுக்கு எதிரானது, எனவே ட்விட்டரில் பதிவேற்றப்படும் பதிப்புரிமை இல்லாத உள்ளடக்கங்களை (திரைப்படங்கள் மற்றும் இதர காணொளிகளை) அந்நிறுவனம் நீக்கிவருகிறது.
செய்தி இத்துடன் முடிவடைந்தது