Page Loader
இனி 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யலாம் - வெளியான புதிய அம்சம்! 
ட்விட்டரில் 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யும் அம்சம் அறிமுகமாகியுள்ளது

இனி 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யலாம் - வெளியான புதிய அம்சம்! 

எழுதியவர் Siranjeevi
Apr 14, 2023
03:41 pm

செய்தி முன்னோட்டம்

டிவிட்டரில் 10,000 கேரக்டர்களில் பயனர்கள் ட்வீட் செய்யும் புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது. சமூக வலைதளங்களில் சுருக்கமாக கருத்துகளை பகிர ட்விட்டரை பெரும்பான்மையாக மக்கள் உபயோகப்படுத்துகின்றனர். இதில் வழக்கமாக 280 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும். ட்விட்டர்  ப்ளூ சந்தா கட்டணம் செலுத்தி வருபவர்கள் சுமார் 4,000 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும். இந்த நிலையில், 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யும் புதிய அம்சம் இப்போது அறிமுகமாகியுள்ளது. மேலும், இந்த ட்வீட்டை பதிவு செய்த முதல் 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைக்கு இந்த வசதி 'ட்விட்டர் ப்ளூ' பயனர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post