Loading...
தேவையற்ற ஸ்பேம் கால்களுக்கு முற்றுப்புள்ளி! தொலைத்தொடர்புத் துறை புதிய AI விதிகள் வெளியீடு
ஸ்பேம் கால்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொலைத்தொடர்புத் துறை புதிய AI விதிகள் வெளியீடு

தேவையற்ற ஸ்பேம் கால்களுக்கு முற்றுப்புள்ளி! தொலைத்தொடர்புத் துறை புதிய AI விதிகள் வெளியீடு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 19, 2026
08:07 pm

செய்தி முன்னோட்டம்

மக்களுக்குத் தேவையற்ற விளம்பர போன் கால்கள் மற்றும் மெசேஜ்கள் போவதைத் தடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்காக போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். ஒரே ஆள் அல்லது நிறுவனம் மக்களைத் தொந்தரவு செய்ய பல எண்களைப் பயன்படுத்தினால், அதை ஏஐ மூலம் கண்டுபிடித்து நிறுவனங்கள் தங்களுக்குள் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு ஆய்வு செய்யும்.

சேவை துண்டிப்பு

5 எண்களுக்கு மேல் புகார்கள் வந்தால் கேஒய்சி சரிபார்ப்பு மற்றும் சேவைத் துண்டிப்பு

புதிய விதிகளின்படி, ஒரே நபர் அல்லது நிறுவனத்துடன் தொடர்புடைய 5 அல்லது அதற்கு மேற்பட்ட எண்கள் 10 நாட்களுக்குள் ஸ்பேம் எனக் குறிக்கப்பட்டால், தொலைத்தொடர்பு நிறுவனம் அந்த நபரின் கேஒய்சி மற்றும் நேரில் சென்று செய்யும் முகவரி சரிபார்ப்பைத் தொடங்கும்.

இதில் முறைகேடு உறுதி செய்யப்பட்டால் அவுட்கோயிங் சேவைகள் உடனடியாகத் தடுக்கப்படும்.

தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் அல்லது நிறுவனங்களின் இணைப்புகள் முழுமையாகத் துண்டிக்கப்படும் நிலையும் ஏற்படும்.

தானியங்கி அழைப்புகள்

தானியங்கி A2P வர்த்தக அழைப்புகளுக்கான புதிய கட்டுப்பாடுகள்

செயலி அல்லது மென்பொருள் மூலம் தானியங்கியாக அழைக்கப்படும் 'A2P' (Application to Personal) அழைப்புகளுக்கும் ரோபோகால்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக ரீதியாக A2P அமைப்புகளைப் பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களும் தாங்கள் பயன்படுத்தும் எண்களைத் தங்களின் தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் முன்னதாகவே முறைப்படி அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு அறிவிக்கத் தவறினால் அவை தேவையற்ற வணிக அழைப்புகளாகக் கருதப்படும். மேலும் A2P அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 5 பைசா வரை கட்டணமும் விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வாடிக்கையாளர் பாதுகாப்பு

வாடிக்கையாளர்களுக்கான புதிய பாதுகாப்பு முறைகள் மற்றும் விலக்குகள்

வாடிக்கையாளர்களுக்கு புகார் அளிப்பதற்கான மேல்முறையீட்டு முறைகளை வழங்கியுள்ள டிராய், அழைப்பு மேலாண்மை செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இருப்பினும், அரசின் அங்கீகாரம் பெற்ற வர்த்தகத் தொலைபேசி எண்களின் தொடர் வழியாக செய்யப்படும் அழைப்புகளுக்குக் குறிப்பிட்ட சில கட்டண விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

35 ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வந்த பழைய நடைமுறைகளுக்குப் பதிலாக, புதிய நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்பேம் அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க டிராய் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ADVERTISEMENT