எஸ்எம்எஸ் மோசடியை தடுக்கும் உத்தரவை செயல்படுத்தும் காலக்கெடு ஒரு மாதம் நீட்டிப்பு
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இணைய சேவை வழங்குநர்களுக்கு வலைதளங்கள், செயலிகள் மற்றும் ஓடிடி இணைப்புகளின் ஏற்புப் பட்டியல் தொடர்பான தனது உத்தரவுக்கு இணங்க ஒரு மாத கால நீட்டிப்பை வழங்கியுள்ளது. டிராய், வலைதளங்கள், செயலிகள், ஓடிடி இணைப்புகள் மற்றும் ஃபோன் எண்கள் அடங்கிய செய்திகளை செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் அனுமதிப்பட்டியலில் சேர்க்காவிட்டால் அவற்றை ஒழுங்குபடுத்துமாறு பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு முதலில் அறிவுறுத்தியது. இப்போது, அனைத்து தொலைத்தொடர்பு வழங்குநர்களும் 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த புதுப்பிக்கப்பட்ட நிலையை வழங்க வேண்டும் என்றும், உத்தரவு வந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இணக்க அறிக்கையை வழங்க வேண்டும் என்றும் டிராய் நிபந்தனை விதித்துள்ளது.
மொபைல், இணைய மோசடிகளை தடுக்க முடிவு
அக்டோபர் 1 முதல் அனுமதிப் பட்டியலிடப்படாத வலைதளங்கள்/செயலிகள்/ஓடிடி இணைப்புகளைக் கொண்ட எந்த டிராஃபிக்கும் அனுமதிக்கப்படாது என்பதை இணைய சேவை வழங்குநர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று திருத்தப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் மற்றும் இணையம் மூலம், பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபடும் குற்றங்கள் அதிகம் நடக்கும் நிலையில், இந்த உத்தரவை டிராய் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. இதற்கிடையில், சிம் கார்டுகளை செயலிழக்கச் செய்யும் புதிய மோசடி திட்டம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி குறித்து பயனர்களுக்கு டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது. மொபைல் எண்கள் டிராயால் அப்படி எதுவும் செயலிழக்கச் செய்ய முடியாது என டிராய் தெளிவுபடுத்தியுள்ளது.