LOADING...
தங்கம் விலை இன்று சற்று சரிவு! இன்றைய விலை விபரம்;
தங்கம் மற்றும் வெள்ளி விலை பிப்ரவரி 20 இல் சற்று குறைந்துள்ளது

தங்கம் விலை இன்று சற்று சரிவு! இன்றைய விலை விபரம்;

எழுதியவர் Siranjeevi
Feb 20, 2023
04:32 pm

செய்தி முன்னோட்டம்

தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலை, கடந்த சில நாட்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு சரிந்தது. அதன் பின்னர் பட்ஜெட் தாக்கலுக்கு பின் மள மளவென தங்கம் விலை உயரத்தொடங்கியது. இந்நிலையில்,சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (பிப்.20) சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.42,280-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை

தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைவு - இன்றைய நிலவரம்

22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.5,280-க்கு விற்பனையாகிறது. அதேப்போல், வெள்ளி விலை இன்றும் குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.71.80 ஆக இருந்தநிலையில் கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.71.70 ஆகவும், கிலோ ரூ.71,800 ஆக இருந்தநிலையில், கிலோவுக்கு ரூ.100 சரிந்து, ரூ.71,700 ஆக குறைந்துள்ளது. வாரத்தின் முதல்நாளில் சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது நடுத்தரக் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. அதுமட்டுமின்றி, மத்திய தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை.