ஒரு வார சரிவுக்கு பின் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம்
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலை, கடந்த சில நாட்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு சரிந்தது. அதன் பின்னர் பட்ஜெட் தாக்கலுக்கு பின் மள மளவென தங்கம் விலை உயரத்தொடங்கியது. இந்நிலையில், தங்கம் விலை தொடர்ந்து 6 நாட்களில், குறைந்து வந்த நிலையில் மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரிப்பு - விலை விபரம் இங்கே
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று(பிப்.18) சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.42,320 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,290க்கு விற்கப்படுகிறது 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.5,290ஆகவும், சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 320ஆகக் அதிகரித்துள்ளது. அதேப்போன்று, வெள்ளி விலை இன்றும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.71.20 ஆக இருந்தநிலையில் கிராமுக்கு 60 பைசா உயர்ந்து, ரூ.71.80 ஆகவும், கிலோ ரூ.71,200 ஆக இருந்தநிலையில், கிலோவுக்கு ரூ.600 ஏற்றம் கண்டு, ரூ.71,800 ஆக அதிகரித்துள்ளது.