மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்!
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வந்த நிலையில், ஒரு சில நாட்களில் பெரும் உயர்வை நோக்கி செல்கிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இதுவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.' அதுமட்டுமின்றி, பட்ஜெட் தாக்கலுக்கு பின்னும் தங்கம் விலை படிப்படியாக தான் ஏற்றத்தை நோக்கி செல்கிறது. இந்த நிலையில், இன்றைய நாள் மார்ச் 01 ஆம் தேதிபடி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.28 அதிகரித்து 5,235-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேப்போல், 22 காரட் 8 கிராம் தங்கம் ரூ.224 அதிகரித்து ரூ.41,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.41,656-ஆக இருந்தது.
தங்கம் விலை இன்று மார்ச் 01 அதிகரிப்பு - விலை விபரம் இங்கே
அதுவே, 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 அதிகரித்து ரூ.5,711க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் தங்கம் ரூ.45,688க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை தொடர்ந்து, வெள்ளி கிராமுக்கு ரூ.1.00 அதிகரித்து இன்று ரூ.70.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் வெள்ளி ரூ.8 அதிகரித்து ரூ.561.60 க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. எனவே, 1 கிலோ வெள்ளி ரூ.70,200 க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவின் ஜனவரி மாத சில்லறைப் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அடுத்துவரும் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தும் என்பது உறுதியாகியுள்ளது. இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களிலும் முதலீட்டை திருப்பியதால் தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது.