Page Loader
பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு
டிக்டாக் செயலியை நியூசிலாந்து மற்றும் பிரிட்டனில் அதிரடியாக தடை செய்துள்ளது

பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு

எழுதியவர் Siranjeevi
Mar 17, 2023
11:40 am

செய்தி முன்னோட்டம்

பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் செயலியை பல நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக மெரிக்கா, கனடா, இந்தியா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்த நிலையில், நியூசிலாந்து நாடும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. இத்தடையானது, குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் பொருந்தும், எனவும் நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சாதனங்களில் இருந்து டிக்டாக் தடை செய்யப்படுகிறது. மேலும், மார்ச் 31-ம் தேதி முதல் இந்தத் தடை அமலுக்கு வருகிறது. சீனாவுக்குச் சொந்தமான சமூக ஊடக செயலியான டிக்டாக் ஆப் தடை தொடர்பாக நியூசிலாந்து நாட்டு அதிகாரிகள் AFP செய்தி ஊடகத்திற்கு கடந்த (மார்ச் 16, வெள்ளிக்கிழமை) இதை தெரிவித்தனர்.

டிக்டாக் தடை

டிக்டாக் செயலியை தடை செய்த நியூசிலாந்து பிரிட்டன் - காரணம் என்ன?

இது தளத்தைப் பற்றிய பாதுகாப்பு அச்சங்களை வெளிப்படுத்தும் சமீபத்திய மேற்கத்திய நாடாக மாறும். எனவே, நாடாளுமன்ற நெட்வொர்க்கிற்கான அணுகல் உள்ள அனைத்து சாதனங்களிலும் TikTok தடைசெய்யப்படும் என்று பாராளுமன்ற சேவையின் தலைமை நிர்வாகி ரஃபேல் கோன்சலஸ்-மான்டெரோ தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கணினி, தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை வைத்திருக்க, இந்த நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அரசு தொலைபேசிகளில் டிக்டோக்கை தடை செய்வதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.