உணவில் உள்ள பூச்சிகளை உடனடியாக கண்டறிய உதவும் செயலி
செய்தி முன்னோட்டம்
ஸ்மார்ட்போன் செயலியில் பலவையும் பயனர்களின் வேலையை எளிதாக்கவே கண்டுபிடிக்கப்படுகின்றன.
அந்த வகையில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் செயலி மளிகை பொருள் ஷாப்பிங்கை எளிதாக்குவது மட்டுமின்றி, நீங்கள் வாங்கவிருக்கும் பொருட்களில் பூச்சிகள் இருப்பதை கண்டறிய உதவுகிறது.
இந்த ஆப் மளிகை ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான, பாதுகாப்பான தேர்வுகளைச் செய்ய நுகர்வோருக்கு உதவும்.
எக்ஸ் தளத்தில் கூறப்பட்டுள்ளது படி, நீங்கள் ஒரு உணவு பொருளை வாங்கியதும், இந்த செயலி கொண்டு ஸ்கேன் செய்தால் போதும்.
நொடிகளில் உங்கள் ஸ்மார்ட்போன் தொடுதிரையில், அந்த உணவில் பூச்சி உள்ளதா இல்லையா என்பதை காட்டிவிடும்.
எக்ஸ் தளத்தில் TheQNewsPatriot என்ற பயனரால் பகிரப்பட்ட வீடியோவில் தான் இந்த தொழில்நுட்பத்தின் நிபுணத்துவம் வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
பூச்சிகளை உடனடியாக கண்டறிய உதவும் செயலி
Watch:
— SGAnon (@TheQNewsPatriot) November 15, 2023
Smartphone app helps people identify foods that contain insects.
As a result, users are discovering that insects are being used as the basis for more than 100 common grocery store foods. pic.twitter.com/68GA15Jqhp