இந்தியாவில் டெக்னோவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் - எப்போது வெளியீடு!
டெக்னோ மொபைல் நிறுவனமானது தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் உற்பத்திய செய்ய தொடங்குகிறது. சீனா தயாரிப்பு நிறுவனமான டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், Made in india திட்டத்தின் கீழ் டெக்னோ நிறுவனம் மடிக்கக்கூடிய ஃபேண்டம் V ஃபோல்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பை நொய்டாவில் உள்ள ஆலையில் திறந்து தயாரித்து வருகின்றன. ஆண்டிற்கு 24 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த இந்தியாவில் Tecno Phantom V Fold ஸ்மார்ட்போன் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியிட உள்ளது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 77 ஆயிரத்து 777 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசானில் ஏப்ரல் 12இல் விற்பனைக்கு வரும் எனக்கூறப்படுகிறது.