புதிய 'கேமன் 20' சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது டெக்னோ!
தங்களுடைய புதிய கேமன் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது டெக்னோ. டெக்னோ கேமன் 20, கேமன் 20 ப்ரோ 5G மற்றும் கேமன் 20 ப்ரீமியர் 5G ஆகிய மூன்று மொபைல்களை இந்த புதிய சீரிஸின் கீழ் வெளியிட்டிருக்கிறது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ. இவற்றில் ஸ்டாண்டர்டு மாடலான கேமன் 20-யானது இன்று முதலும், கேமன் 20 ப்ரோவானது ஜூன் இரண்டாம் வாரத்திலும், ப்ரீமியர் மாடலானது ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்திலும் அமேசான் தளத்தின் மூலம் விற்பனை செய்யப்படவிருக்கின்றன. 8GB/256GB கேமன் 20 ஸ்டாண்டர்டு வேரியன்ட் ரூ.14,999 விலையில் வெளியாகியிருக்கிறது. 8GB/128GB கேமன் 20 ப்ரோ வேரியன்ட் ரூ.19,999 விலையிலும், 8GB/256GB வேரியன்ட் ரூ.21,999 விலையிலும் விற்பனை செய்யப்படவிருக்கின்றன.
ப்ராசஸர் மற்றும் பிற வசதிகள்:
கேமன் 20: ஹீலியோ G85 ப்ராசஸர், 64MP ட்ரிபிள் கேமரா செட்டப், 5000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி. கேமன் 20 ப்ரோ 5G: டைமன்சிட்டி 8050 ப்ராசஸர், 64MP முதன்மை கேமரா+2MP மேக்ரோ+ பொக்கே கேமராக்கள் 5000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி. கேமன் 20 ப்ரீமியர் 5G: டைமன்சிட்டி 8050 ப்ராசஸர், 8GB/512GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வசதி, 5000mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி. அனைத்து மாடல்களிலும் 32MP ஃசெல்பி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. மேற்கூறியபடி மற்ற இரு மாடல்களின் விலைகள் வெளியிடப்பட்ட நிலையில், ப்ரீமியர் 5G மாடலின் விலையை இன்னும் டெக்னோ நிறுவனம் அறிவிக்கவில்லை.