நாளை இந்தியாவில் வெளியாகிறது 'டெக்னோ பேண்டம் V ஃபிளிப்' ஸ்மார்ட்போன்
செய்தி முன்னோட்டம்
சாம்சங் மற்றும் கூகுள் உள்ளிட்ட முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் 'பேண்டம் V ஃபோல்டு' என்ற ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது சீனாவைச் சேர்ந்த டெக்னோ நிறுவனம்.
இந்தியாவிலும் அந்த ஸ்மார்ட்போன் வெளியாகியிருந்த நிலையில், நாளை 'பேண்டம் V ஃபிளிப்' மாடல் ஸ்மார்ட்போன் ஒன்றையும் இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
120Hz ரெப்ரஷ் ரேட் கொண்ட, 6.9 இன்ச் முதன்மை டிஸ்பிளே மற்றும் வட்ட வடிவ 1.32 இன்ச் வெளிப்புற டிஸ்பிளேவுடன் இந்தப் புதிய ஃபிளிப் ஸ்மார்ட்போனை வெளியிடவிருக்கிறது டெக்னோ.
இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கம், 64MP முதன்மைக் கேமரா மற்றும் 13MP அல்ட்ரா வைடு கேமரா பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், முன்பக்கம் 32MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது.
டெக்னோ
டெக்னோ பேண்டம் V ஃபிளிப்: ப்ராசஸர் மற்றும் வெளியீடு
இந்தப் புதிய ஃபிளிப் போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 8050 ப்ராசஸரை டெக்னோ பயன்படுத்தியிருக்கும் நிலையில், 8GB ரேம் மற்றும் 256 ஸ்டோரேஜ் கான்ஃபிகரேஷனில் இந்தப் புதிய ஸ்மார்ட்போன் வெளியாகவிருக்கிறது.
இந்த ஸ்மார்போனானது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு வெளியாகவிருக்கும் நிலையில், இந்த போனிக்கு மூன்று வருட ஆண்ட்ராய்டு அப்டேட்டையும், மூன்று வருட பாதுகாப்பு அப்டேட்டையும் வழங்கத் திட்டமிட்டிருக்கிறது டெக்னோ.
இந்த ஃபிளிப் போனானது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4,000mAh பேட்டரியை பெறவிருக்கிறது. நாளை ரூ.49,999 விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.