டெக்னோவின் 'பேண்டம் V ஃபோல்டு' ஸ்மார்ட்போன், எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
செய்தி முன்னோட்டம்
பட்ஜெட் மற்றும் மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சீனாவைச் சேர்ந்த டெக்னோ நிறுவனம், இந்தியாவில் திடீரென ப்ரீமியம் ஸ்மார்ட்போன் ஒன்றை, அதுவும் ஃபோல்டபிள் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியது. சாம்சங்கின் கேலக்ஸி Z ஃபோல்டு ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக வெளியாகியிருக்கிறது டெக்னோ பேண்டம் V ஃபோல்டு ஸ்மார்ட்போன் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
வசதிகள்:
7.85 இன்ச் LTPO AMOLED டிஸ்பிளே
மீடியாடெக் டைமன்சிட்டி 9000+ ப்ராசஸர்
50MP+50MP+13MP ரியர் கேமரா: 32MP+16MP செல்ஃபி கேமரா
5,000 mAh பேட்டரி
45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
ஆண்ட்ராய்டு 13
விலை:
12 GB ரேம் + 256 GB ஸ்டோரேஜ் - ரூ.88,999
மொபைல் ரிவ்யூ
டெக்னோ பேண்டம் V ஃபோல்டு: பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?
ஓப்போ மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்கள் விற்பனை செய்து வரும் ஃப்ளிப் போனின் விலையில் ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது டெக்னோ.
ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களிலேயே ஒரு பட்ஜெட் போன் என இதனைக் கூறலாம். டீசன்ட்டான டிசைன் மற்றும் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கிறது இந்த பேண்டம் V ஃபோல்டு.
மீடியாடெக்கின் ஃப்ளாக்ஷிப் ப்ராசஸர் என்பதால், பெர்ஃபாமன்ஸில் எந்தக் குறையும் இல்லை. சிறப்பாகவே இருக்கிறது.
இந்த பேண்டம் ஃபோல்டின் பேட்டரி லைஃப் கொஞ்சம் குறைவு தான். ஆனால், இதன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி அதற்கு ஈடு செய்யும் வகையில், 5000mAh பேட்டரியை 1 மணி நேரத்தில் சார்ஜ் செய்து விடுகிறது.
மொத்தத்தில், குறைந்த விலையில் ஒரு சிறந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாகவே வெளியாகியிருக்கிறது பேண்டம் V ஃபோல்டு.