Page Loader
ஆன்லைன் மோசடி.. ரூ.42 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!
ஆன்லைன் மோசடியில் சிக்கிய மென்பொறியாளர்

ஆன்லைன் மோசடி.. ரூ.42 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!

எழுதியவர் Prasanna Venkatesh
May 15, 2023
04:24 pm

செய்தி முன்னோட்டம்

ஆன்லைனில் தொடர்ந்து மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகின்றன. பெரும்பாலான நேரங்களின் ஆன்லைன் பயனர்களின் பேராசையும், தற்காப்பின்மையுமே மோசடி சம்பவங்களுக்கு வழிவகுகின்றன. தற்போதும் ஹரியானாவில் உள்ள குருகிராமில் மென்பொருள் பொறியாளர் ஒருவரை ஏமாற்றி பணம் பறித்திருக்கிறது ஆன்லைன் மோசடி கும்பல் ஒன்று. கடந்த மார்ச் மாதம் பகுதி நேர வேலை அளிப்பதாகக் கூறி, மோசடி செய்யப்பட்ட நபரை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டிருக்கிறது மோசடி கும்பல் ஒன்று. முதலில் யூடியூப் காணொளிகளை லைக் செய்தால் போதும் எனக் கூறியிருக்கின்றன. பின்னப் டெலிகிராமில் ஒரு குழுவில் இணைந்திருக்கின்றனர். இந்த செயல்பாடுகளை திவ்யா என்ற பெயரில் ஒருவர் மோசடி செய்யப்பட்ட நபரிடம் செய்திருக்கிறார்.

ஆன்லைன் மோசடி

புதிய வகையில் மோசடி: 

டெலிகிராமில் இணைந்த பின்னர் அந்தக் குழுவில் இருந்தவர்கள் வைத்து நிறைய முதலீடு செய்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியிருக்கின்றனர். இதனை நம்பிய மென்பொறியாளர் தன்னுடைய கணக்கில் இருந்து, தன்னுடைய மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்தும் ரூ.42,31,000-த்தை அனுப்பியிருக்கிறார். மென்பொறியாளரிடம், அவர் 69 லட்சம் ரூபாய் லாபம் அடைந்திருக்கிறார், ஆனால் அந்தப் பணத்தை வெளியே எடுக்க மேலும் ரூ.11,000 அனுப்ப வேண்டும் என அவர்கள் கேட்டபோது எச்சரிக்கையாகி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பணத்தை மீட்க முயற்சி செய்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் வரும் வேலைவாய்ப்புகளை கவனத்தோடு அனுக வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியும் படித்தவர்களே இது போன்று மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்கின்றனர்.