TCS ஊழியர்களுக்கு புதிய ஷாக் - ஊதிய உயர்வு குறைக்கப்படுகிறதா?
உலகளவில் பொருளாதார மந்தநிலை காரணமாக பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வந்தன. அதில் ஒன்று தான் டிசிஎஸ் நிறுவனம். தற்போது டிசிஎஸ் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது செலவுகளை குறைக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், தற்போது பணிபுரிந்து வரும் ஊழியர்களின் ஊதியத்தை குறைக்க இருப்பதாகவும், புதிய ஆட்களை சேர்ப்பதை தாமதப்படுத்தவும் உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி வெளியான அறிக்கையில் நாட்டில் உள்ள ஐடி நிறுவனங்கள் 2023-24 ஆம் காலாண்டில் ஊதிய குறைப்பை செய்யும் எனவும், ஆனால் பெரிய ஐடி நிறுவனங்களில் இது 85 முதல் 100 சதவிகிதம் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசிஎஸ் உழியர்களுக்கு மேலும் புதிய சிக்கல் - அறிக்கை
மேலும், பெரிய ஐடியின் பல நிறுவனங்கள் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் மேக்ரோ பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்வதால் குறைந்த விகிதத்தில் பணியாளர்களை நியமிக்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதுமட்டுமின்றி, பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக, ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியமர்த்தல் திட்டங்களில் எச்சரிக்கையாக உள்ளன. இதன் விளைவாக பணியாளர்களின் எண்ணிக்கையில் மந்தநிலை ஏற்படுகிறது என ஃபோர்கைட்ஸ் (APAC) இன் மனிதவள இயக்குநர் கல்யாண் துரைராஜ் தெரிவித்துள்ளார். இதேப்போல், கடந்த சில நாட்களுக்கு முன் விப்ரோ நிறுவனமும் புதியதாக பணியில் அவர்களின் ஆண்டு சம்பளத்தை மூன்றரை லட்சம் ரூபாயாக குறைப்பதாக அறிவித்து இருந்தது.