
தமிழக அரசுடன் ஓலா நிறுவனம் மிகப்பெரிய ஒப்பந்தம்! 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
உலகமே மின்சார வாகனங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஓலா நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.
இந்நிறுவனம் தனது மிகப் பெரிய திட்டத்தை தமிழ்நாட்டில் இறக்கவுள்ளது. அதன்படி, தமிழக அரசுக்கும், ஓலா எலக்ட்ரிக் மொபைலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே 7614 கோடி ரூபாய் முதலீடு குறித்தான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் 2,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையம், வீட்டு விற்பனையாளர் மற்றும் சப்ளையர் பூங்காக்கள் தவிர, மின்சார இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் பேட்டரி செல்கள் தயாரிக்க பயன்படும் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய ஸ்டார்ட்அப் இந்த ஆண்டின் பிற்பகுதியில் மையத்திலிருந்து செல்களை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்கும் என்று அது கூறியது.
ஓலா நிறுவனம்
தமிழ்நாட்டில் 7614 கோடி ரூபாயில் ஓலா நிறுவனம் ஆலையை திறக்க ஒப்பந்தம்
இதுமட்டுமில்லாமல் 3,000 பேருக்கு மேலாக வேலை வாய்ப்பினை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவ திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆலையானது 1.4 லட்சம் கார்கள் ஆண்டுக்கு உற்பத்தி செய்யும் திறன் உடையதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இன்னும் இதுபோன்ற முதலீடுகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், 50,000 கோடி ரூபாய் முதலீடும், இதன் மூலம் 1.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆலையானது கிருஷ்ணகிரியில் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஓலா நிறுவனம் மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியினை செய்து வருகின்றது. இது ஓசூரில் ஆலை அமைந்துள்ளது.