Ola S1 Air புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 பேட்டரி வேரியண்ட் அறிமுகம்!
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், அதன் புதிய 2 KWH பேட்டரி பேக் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் நம்பர் 1 நிறுவனமாக இருக்கக்கூடிய Ola Electric நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலைக்கான ஸ்கூட்டர் சந்தையை கைப்பற்ற இப்போது புதிய Low Range எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த, Low Range Battery ஆப்ஷன்கள் Ola S1 Air மற்றும் Ola S1 ஆகிய இரு ஸ்கூட்டர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேட்டரி ஆனது 2 KWH பேட்டரி பேக் அதிகபட்ச ரேஞ்சு 91 KM ஆகும். அடுத்து, இதன் 3 KWH பேட்டரி பேக் மாடல் 125 KM ரேஞ்சு கொண்டுள்ளது.
Ola S1 Air எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உட்பட 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது;
இதன் 4 KWH பேட்டரி பேக் மாடல் 165 KM ரேஞ்சுடன் வருகிறது. இந்த S1 ஸ்கூட்டர் 3 KWH பேட்டரி ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இதன் ரேஞ்சு 141 KM ஆகும். ஓலா எஸ் 1 ப்ரோ, இந்த ஸ்கூட்டரில் 4 KWH பேட்டரி பேக், 8.5KW மோட்டார் வசதி உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் 116 KPH மற்றும் அதிகபட்ச ரேஞ்சு 185 KM ஆகும். முன்பு இருந்ததைவிட பல வித ஆப்ஷன்கள் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கிடைக்கின்றன. மேலும், புதிய S1 Air ஜூலை மாதம் முதல் தொடங்கும். பல வேரியண்ட்கள் இருப்பதால் நமக்கு இந்த ஸ்கூட்டர்கள் கிடைக்க 3 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.