மின் கட்டண உயர்வால் உயர்ந்த வருவாய்! மின்சார வாரியம் மகிழ்ச்சி
தமிழ்நாடு மின் வாரியத்திற்கு மின் கட்டணம் புதிய இணைப்பால் வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி, மின் கட்டண உயர்வால், மின் வாரியத்திற்கு ஜனவரியில் கூடுதலாக, 1,200 கோடி ரூபாயும்; பிப்ரவரியில், 1,585 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி, கடந்த 2021, 22இல் வருவாய், 72 ஆயிரத்து 107 கோடி ரூபாயாகவும்; செலவு, 84 ஆயிரத்து 889 கோடி ரூபாயாகவும் இருந்ததால், 12 ஆயிரத்து 782 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதனால், மின் வாரியத்தின் கடன், 1.59 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதன் நிதி நெருக்கடியை சரிசெய்ய, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 8 ஆண்டுகளுக்கு பின், மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணத்தை உயர்த்தியது.
மின்சார கட்டண வருவாய் இந்த ஆண்டில் அதிகரிப்பு - மின்வாரியம் தகவல்
எனவே, வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. இதனிடையே, ஜனவரியில், 4,900 கோடி ரூபாயும்; பிப்ரவரியில், 4,995 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி தெரிவிக்கையில், மின் கட்டண உயர்வால் ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் எனவும், மாதம் கூடுதலாக, 1,200 கோடி ரூபாய் முதல் 1,500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது இன்னும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.