Page Loader
'நெய்ல் பாலிஷ்'களை பயன்படுத்தி பார்க்கும் புதிய AR ஃபில்டரை அறிமுகப்படுத்தியது ஸ்னாப்சாட்!
புதிய AR ஃபில்டரை அறிமுகப்படுத்தியது ஸ்னாப்சாட்

'நெய்ல் பாலிஷ்'களை பயன்படுத்தி பார்க்கும் புதிய AR ஃபில்டரை அறிமுகப்படுத்தியது ஸ்னாப்சாட்!

எழுதியவர் Prasanna Venkatesh
May 29, 2023
10:12 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்னாப்சாட்டின் தாய் நிறுவனமான ஸ்னாப், பயனர்களுக்கு புதிய AR ஃபில்டர் வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தப் புதிய ஃபில்டரின் மூலம் பயனர்கள் தங்கள் மொபலின் கேமரா கண்கள் கொண்டே, நெய்ல் பாலிஷ்களை விரல்களில் பயன்படுத்திப் பார்க்க முடியும். இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த OPI என்ற நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது ஸ்னாப்சாட். மேலும், இந்த வசதியின் மூலம் எட்டு விதமான கலர்களை தங்கள் விரல்களில் பயன்படுத்தினால் பார்வைக்கு எப்படி இருக்கிறது என பயனர்கள் அறிந்து கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டிருக்கிறது ஸ்னாப் நிறுவனம். இதேபோல் நான்கு விதமான லிப்ஸ்டிக்கை பயன்படுத்தி பார்க்கும் வகையிலான AR ஃபில்டர் ஒன்றையும் அமெரிக்காவைச் சேர்ந்த சூப்பர்கூப் என்ற நிறுவனத்துடன் கைகோர்த்து ஸ்னாப் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Embed

Twitter Post

Snapchat's newest AR filter can paint your nails to give you an idea of what they might look like. pic.twitter.com/PPAJxFw23d— Tech News (@beingtechster) May 25, 2023