LOADING...
அஞ்சலக சிறு சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் 0.70% உயர்வு!
அஞ்சல சேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது மத்திய அரசு

அஞ்சலக சிறு சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் 0.70% உயர்வு!

எழுதியவர் Siranjeevi
Apr 01, 2023
01:34 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் சிறு சேமிப்பு திட்டங்களில் முக்கியமானவை அஞ்சலக திட்டங்கள் தான். இதனிடையே, ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வட்டி விகிதத்தினை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதில், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், மாதாந்திர வருவாய் திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் போன்ற திட்டங்களுக்கு 70 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இத்தோடு டெபாசிட் திட்டங்களான டைப் டெபாசிட் மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கும் வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மத்திய அரசானது சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அஞ்சலக துறையில் வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகிறது. இதில் அதிகபட்சமாக தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான வட்டி விகிதமானது 7% இருந்து 7.7% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

அஞ்சலக சிறு சேமிப்பு திட்டத்தில் 0.7 சதவீதம் வட்டி உயர்வு