Page Loader
சிறு சேமிப்பு திட்டத்திற்கும் ஆதார் பான் எண் கட்டாயம்!
சிறு சேமிப்பு திட்டங்களுக்கு இனி ஆதார் பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சிறு சேமிப்பு திட்டத்திற்கும் ஆதார் பான் எண் கட்டாயம்!

எழுதியவர் Siranjeevi
Apr 01, 2023
07:22 pm

செய்தி முன்னோட்டம்

அரசின் முக்கியமான அனைத்து சேவைகளுக்குமே பான் எண் மற்றும் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரசின் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம், தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களுக்கு இவை பொருந்தும். இதில் சிறு சேமிப்பு சந்தாதாரர்கள் PPF, SSY, NSC, SCSS சிறுசேமிப்பை கணக்கை தொடங்கும் போது செப்டம்பர் 30-இல் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்சம் ஆதார் எண் கொடுப்பது கட்டாயமாகும்.

ட்விட்டர் அஞ்சல்

சேமிப்பு திட்டத்துக்கு பான் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது