
சிங்கப்பூரின் DS-SAR செயற்கைக் கோளை வெற்றிகரமாக நிலை நிறுத்தியது PSLV-C56
செய்தி முன்னோட்டம்
சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்டி இன்ஜினியரிங் மற்றும் சிங்கப்பூர் அரசின் பிரதிநிதியான DSTA இணைந்து உருவாக்கிய DS-SAR செயற்கைக் கோளானது இன்று காலை இஸ்ரோவின் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
இஸ்ரோவின் PSLV-C56 ராக்கெட் மூலம், ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து DS-SAR செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது.
இந்த DS-SAR செயற்கைக் கோளுடன் மேலும் 6 துணை செயற்கைக் கோள்களும், இத்துடன் விண்ணில் ஏவப்பட்டு, பூமியிலிருந்து 535 கிமீ சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த ஏவலானது, PSLV ராக்கெட்டுக்கு 58வது ஏவலாகவும், PSLV ராக்கெட் கூடுதல் பூஸ்டர்கள் இல்லாமல் ஏவப்படுவதில் 17வது ஏவலாகவும் அமைந்திருக்கிறது.
செயற்கைக்கோள்
எதற்காக இந்த செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன?
சிங்கப்பூர் அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் பூமியின் செயற்கைக் கோள் புகைப்படங்களை எடுக்க இந்த DS-SAR செயற்கைக் கோள் பயன்படுத்தப்படவிருக்கிறது.
எஸ்டி இன்ஜினியரிங் நிறுவனமும், தங்களுடைய வணிக பயன்பாடுகளுக்குத் தேவையான ஜியோஸ்பேஷியல் தகவல்களை பெறவும் இந்த செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தவிருக்கிறது.
இந்த செயற்கைக் கோளில் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் உருவாக்கிய Synthetic Aperture Radar (SAR) என்ற சாதனம் பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த சாதனமானது பகல் மற்றும் இரவு என அனைத்து நேரங்களிலும் காலநிலை குறித்த தகவல்களை வழங்கவும், 1மீ அளவு உயர்தர செயற்கைக்கோள் புகைப்படங்களை எடுக்கவும் பயன்படுத்தப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வெற்றிகரமாக ஏவப்பட்டது PSLV-C56
Lift-off images.
— ISRO (@isro) July 30, 2023
More in our Instagram account isro.dos pic.twitter.com/dAUmD8mNoN