பூமியில் மனித இனம் அழியப்போவது உறுதி: 20 கோடி ஆண்டுகளில் உருவாகும் புதிய பெரும் கண்டம்
செய்தி முன்னோட்டம்
பூமியின் கண்டங்கள் அனைத்தும் மீண்டும் ஒன்றுசேர்ந்து ஒரு பிரம்மாண்டமான புதிய கண்டத்தை உருவாக்கும் என்ற தகவலை புவியியல் வல்லுநர்கள் பல தசாப்தங்களாக கணித்து வருகின்றனர். சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உடைந்த பாஞ்சியா கண்டத்தை போல, எதிர்காலத்தில் உருவாகவுள்ள புதிய நிலப்பரப்பு மனிதர்கள் உட்படப் அனைத்து பாலூட்டிகளின் அழிவிற்கும் வழிவகுக்கும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இருப்பினும், இந்த நிகழ்வு நிகழ இன்னும் 20 கோடி ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்பதால் தற்போதைய மனித குலத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை.
சாத்தியக்கூறுகள்
எதிர்கால சூப்பர் கண்டங்களின் நான்கு சாத்தியக்கூறுகள்
புவியியல் ஆய்வுகளின்படி, கண்டங்கள் ஒன்றிணைவதில் நான்கு விதமான சாத்தியக்கூறுகள் உள்ளன:
நோவோபாஞ்சியா: பசிபிக் பெருங்கடல் மூடி, அட்லாண்டிக் பெருங்கடல் விரிவடைந்து அமெரிக்கா மற்றும் ஆசியா கண்டங்கள் ஒன்று சேரும்.
அவ்ரிகா: பசிபிக் மற்றும் அட்லாண்டிக் ஆகிய இரண்டு பெருங்கடல்களும் மூடப்பட்டு, நிலப்பரப்புகள் நிலநடுக்கோட்டைச் சுற்றி வளையம் போல அமையும்.
அமேசியா: ஆர்க்டிக் பெருங்கடல் மூடி, அண்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களும் வடதுருவத்தை நோக்கி நகரும்.
பாஞ்சியா அல்டிமா: அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்கள் முற்றிலும் மூடப்பட்டு, அனைத்துக் கண்டங்களும் நிலநடுக்கோட்டுப் பகுதியில் ஒன்றாக இணையும்.
பாஞ்சியா அல்டிமா
மனித குலத்தை அழிக்கும் பாஞ்சியா அல்டிமா
மேற்கூறிய அமைப்புகளில் 'பாஞ்சியா அல்டிமா' உருவானால், அதுவே மனித இனம் மற்றும் பாலூட்டிகளின் பேரழிவுக்கு காரணமாக அமையும். கடலிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள இதன் உள்பகுதிகள் 90% வெப்பமான வறண்ட பாலைவனங்களாக மாறும்.
மேலும், தட்டுப் புவியியல் நகர்வுகளால் ஏற்படும் எரிமலை வெடிப்புகள் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடை கணிசமாக உயர்த்தும்.
அந்நேரத்தில் சூரியனின் கதிர்வீச்சு வீச்சும் அதிகரிக்கும் என்பதால், பூமி முழுவதும் 40°C முதல் 70°C வரை வெப்பநிலை உயரும்.
பூமியின் 8% முதல் 16% நிலப்பரப்பு மட்டுமே பாலூட்டிகள் வாழத் தகுதியானதாக இருக்கும். அதிக வெப்பம் மற்றும் காற்றற்ற சூழலால் மனித உடலால் வெப்பத்தைத் தணிக்க முடியாமல் பேரழிவு ஏற்படும்.