இந்தியாவில் வெளியானது சாம்சங்கின் புதிய கேலக்ஸி F54 ஸ்மார்ட்போன்!
ரூ.30,000-குள்ளான விலையில் புதிய கேலக்ஸி F54 மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது சாம்சங். பெரிய பேட்டரி, பெரிய டிஸ்பிளே, மிட்ரேஞ்சு சிப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளியாகியிருக்கிறது இந்த புதிய F54. இன்று மாலை 3.00 மணி முதல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் இந்த புதிய ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்து கொள்ளலாம், விரைவில் இந்த தளத்திலேயே இதன் விற்பனை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த F54-ல் 120Hz ரெப்ரெஷ் ரேட்டுட்ன் கூடிய 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பும் உண்டு. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் இந்த F54-க்கு 4 வருடத்திற்கு இயங்குதள அப்டேட்டும், 5 வருடத்திற்கு பாதுகாப்பு அப்டேட்டும் வழங்குவதாக உறுதியளித்திருக்கிறது சாம்சங்.
ப்ராசஸர் மற்றும் விலை:
சமீபத்தில் வெளியான கேலக்ஸி A34-ல் பயன்படுத்தப்பட்ட அதே எக்ஸினோஸ் 1380 சிப்செட்டையே இந்த கேலக்ஸி F54-லும் பயன்படுத்தியிருக்கிறது சாம்சங். பின்பக்கம் 108MP முதன்மை கேரமா, 8MP அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்பக்கம் 32MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 6,000mAh பேட்டரியை F54-ல் அளித்திருக்கிறது சாம்சங். ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் அடிப்பகுதியில் ஒரே ஒரு ஸ்பீக்கர் கொடுக்கப்பட்டிருக்கிறது. IP ரேட்டிங் இல்லை. சார்ஜர் மற்றும் கேஸ் போனுடன் கொடுக்கப்படவில்லை. 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட தொடக்க மாடலுக்கு ரூ.27,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.