வெளியானது சாம்சங் கேலக்ஸி 'ஃப்ளிப் 5' மற்றும் 'ஃபோல்டு 5' ஸ்மார்ட்போன்கள்
சாம்சங் ரசிகர்களுடன் ஆவளுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த கேல்கஸி அன்பேக்டு நிகழ்வு நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த நிகழ்வில் நாம் எதிர்பார்த்ததைப் போலவே ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் டேப்லட் எனப் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங். கேலக்ஸி Z ஃப்ளிப் 5: 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளேவையும், வெளிப்பக்கம் 3.4 இன்ச் AMOLED டிஸ்பிளேவையும் கொடுத்திருக்கிறது சாம்சங். பின்பக்கம் 12MP+12MP டூயல் கேமரா மற்றும் 10MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸருடன் வெளியாகியிருக்கிறது ஃப்ளிப் 5. 3,700mAh பேட்டரி, 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங், 8GB+256GB/512GB ஆப்ஷன்களுடன் ரூ.1 லட்சம் விலையில் அறிமுகமாகியிருக்கிறது ஃப்ளிப் 5.
சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 5:
உள்பக்கம் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 7.6 இன்ச் AMOLED டிஸ்பிளேவையும், வெளிப்பக்கம் 6.2 இன்ச் டிஸ்பிளேவையும் கொடுத்திருக்கிறது சாம்சங். ஃபோல்டு 5 மாடலிலும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸரையே கொடுத்திருக்கிறது சாம்சங். 50MP+12MP+10MP ட்ரிபிள் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. 4,400mAh பேட்டரி, 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய வசதிகளை ஃபோல்டிலும் கொடுத்திருக்கிறது சாம்சங். அதிகபட்சமாக 12GB ரேம் மற்றும் 1TB வரை ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டிருக்கும் ஃபோல்டு ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு வெளியாகியிருக்கிறது. இந்த கேலக்ஸி Z ஃபோல்டு 5 ஸ்மார்ட்போனை ரூ.1.5 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங். ஆகஸ்ட் 11 முதல் மேற்கூறிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.